Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”மிகவும் பணிவான மனிதர், கிராமத்திற்கே பேரிழப்பு” தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2025
in அரசியல் செய்திகள்
0
”மிகவும் பணிவான மனிதர், கிராமத்திற்கே பேரிழப்பு” தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி | இந்தியா
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 22, 2025 11:59 AM IST

விமானி நமன்ஷ் ஷ்யால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கிராம மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். மறைந்த விமானி ஷ்யால் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த காங்க்ரா மாவட்டத்தை சேர்ந்தவர்.

விமானி நமன்ஷ் ஷ்யால்
விமானி நமன்ஷ் ஷ்யால்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் THE DUBAI AIRSHOW என்ற நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி அல் – மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.

இதில் பல்வேறு நாட்டு விமானப்படை விமானங்களுடன் இந்திய விமானப்படையின் தேஜஸ், ரஃபேல், சூரிய கிரண் உள்ளிட்ட விமானங்கள் இணைந்து வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின. இந்நிலையில் கண்காட்சியின் கடைசி நாளான நேற்று இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ’LCA Mk-1’ என்ற தேஜஸ் ரக விமானமும் பங்கேற்றது.

இந்த விமானம் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானி நமன்ஷ் ஷ்யால்- ன் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. தேஜஸ் விமான விபத்தில் விமானி நமன்ஷ் ஷ்யால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள விமானப்படை,இறந்த விமானியின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்போம் என் கூறியுள்ளது. மேலும் தேஜஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் விமானி நமன்ஷ் ஷ்யால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கிராம மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். மறைந்த விமானி ஷ்யால் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த காங்க்ரா மாவட்டத்தை சேர்ந்தவர். ஷியாலின் உயிரிழப்பை அறிந்த அவரது குடும்பத்தினருக்கு கிராம மக்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 34 வயதான விமான ஷ்யாலுக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

விமானி ஷ்யால் மறைவு குறித்து அவரது மைத்துனர் ரமேஷ் குமார் பேசுகையில், ”அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க இருந்தது. அவர் இளம்வயதிலே படைத்தலைவர் (விங் கமெண்டர்) பதவியை எட்டியிருந்தார். அவர் அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்வார். அவரது இழப்பால் எங்கள் கிராமம் முழுவதும் பெரும் துயரத்தை சந்தித்துள்ளது” என்றார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 22, 2025 11:59 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

”மிகவும் பணிவான மனிதர், கிராமத்திற்கே பேரிழப்பு” தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி



.

Previous Post

புதிய தொழிலாளர் சட்டம்:“இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினம்” – காங்கிரஸ் கடும் விமர்சனம் |New Labor Law: “A black day in the history of Indian labor” – Congress strongly criticizes

Next Post

BJP, Shiv Sena locked the candidates in hotels for fear that they would withdraw their last nominations-கடைசிவேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள் என்ற அச்சத்தில் வேட்பாளர்களை ஹோட்டலில் அடைத்துவைத்த பா.ஜ, சிவசேனா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BJP, Shiv Sena locked the candidates in hotels for fear that they would withdraw their last nominations-கடைசிவேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள் என்ற அச்சத்தில் வேட்பாளர்களை ஹோட்டலில் அடைத்துவைத்த பா.ஜ, சிவசேனா

BJP, Shiv Sena locked the candidates in hotels for fear that they would withdraw their last nominations-கடைசிவேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள் என்ற அச்சத்தில் வேட்பாளர்களை ஹோட்டலில் அடைத்துவைத்த பா.ஜ, சிவசேனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In