தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர் அஜித் குமாருக்கு கார் ரேஸ் பந்தயத்தில் தீவிர ஆர்வமுடையவர். கடந்த 2004-ம் ஆண்டு F3 கார்பந்தயத்திலும், 2010-ம் ஆண்டு பார்முலா 2 கார்பந்தயத்திலும் அஜித் குமார் பங்கேற்றார். மேலும், “அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் தனியாக ஒரு அணியை நிர்வகித்து, இந்த அணி சார்பில் Fabian Duffieuxwill-ஐ அதிகாரப்பூர்வ ஓட்டுநராகவும் நடிகர் அஜித் குமார் அறிவித்தார். இதற்கிடையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ரேஸ் வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவன அதிகாரிகளுடன் அஜித் ஆலோசனை மேற்கொண்டார்.
