ரயில் டிக்கெட் புக்கிங்கை பொறுத்தவரை குறிப்பாக தட்கல் அல்லது சிறப்பு ரயில்களுக்கான புக்கிங் போன்றவற்றில் ஒவ்வொரு நொடியும் முக்கியமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் பலர் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட் புக்கிங்கில் ஈடுபடுவதால், சர்வர்கள் மெதுவாகின்றன. இந்த சூழலில் அக்டோபர் 1 முதல் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஆம், இந்திய ரயில்வே அதன் ஆன்லைன் புக்கிங் முறையை கடுமையாக்குகிறது. இதனால் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC அக்கவுண்ட்ஸ்களை கொண்ட பயணிகள் மட்டுமே முதல் முக்கியமான நிமிடங்களில் புக்கிங் செய்ய முடியும். இந்த நேரத்தில் ஏஜென்ட்கள் தங்கள் முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். இந்த விதியை கொண்டுவர மோசடியை கட்டுப்படுத்துதல், சாதாரண பயணிகளும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சீட்டை பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை வழங்குதல் போன்ற நோக்கங்கள் காரணமாக கூறப்படுகின்றன.
குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பிரபலமான நீண்ட தூர வழித்தடங்களில் ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை, பிளாக் மார்க்கெட் செழிப்பாக வளரவும், ஆட்டோமேட்டட் புக்கிங் சாஃப்ட்வேரின் தவறான பயன்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. இதற்கு முன்னதாக, தட்கல் புக்கிங்ஸ்களுக்கு மட்டுமே ஆதார் இணைப்பு கட்டாயமாக இருந்த நிலையில் ஆட்டோமேட்டட் பல்க் ரிஸர்வேஷன்ஸ் மற்றும் மோசடிகளைக் குறைக்க, இப்போது வழக்கமான புக்கிங்ஸ்களின் தொடக்க நிமிடங்களுக்கும் இந்த விதியை இந்திய ரயில்வே அமல்படுத்த உள்ளது.
பொதுவாக ரயில் புக்கிங்ஸ் 60 நாட்களுக்கு முன்பு சரியாக காலை 8:00 மணிக்கு ஓபன் செய்யப்பட்டு, பேஸஞ்சர் ரிஸர்வேஷன் சிஸ்டம் (PRS) புக்கிங்ஸ்களை ஏற்கத் தொடங்குகிறது. மேலும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆயிரக்கணக்கான யூஸர்கள் ஒரே நேரத்தில் log on செய்கிறார்கள். சூழல் இப்படி இருக்க முன்பு ஹை-ஸ்பீட் இன்டர்நெட்டை பயன்படுத்தும் தொழில்முறை முகவர்கள், ஒருசில வினாடிகளுக்குள் பெரிய அளவிலான டிக்கெட்டுகளை புக்கிங் செய்து விடுவார்கள். இது ரயில் டிக்கெட்டுகளை பெற முயற்சிக்கும் வழக்கமான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆனால், விரைவில் அமல்படுத்த உள்ள புதிய முறையில், புக்கிங் ஓபன் செய்த பிறகு முதல் 15 நிமிடங்கள் ஆதார் இணைக்கப்பட்ட தனிப்பட்ட யூஸர்களுக்கானதாக இருக்கும். அதாவது இவர்கள் டிக்கெட் புக்கிங் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் இல்லாத யூஸர்கள் புக்கிங் துவங்கி 15 நிமிடங்களுக்குப் பிறகே புக்கிங் செய்ய முடியும். அதே நேரம் ஏஜென்ட்டுகள் வழக்கம்போல 10 நிமிடங்கள் காத்திருந்து 8.10 மணிக்கு பிறகு புக்கிங் செய்து கொள்ளலாம்.
புக்கிங் சிஸ்டமை மோசடி செய்பவர்கள தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, அக்டோபர் 1 முதல், ஆதார் கார்டு இணைக்கப்பட்ட அக்கவுண்ட்ஸ்களை கொண்ட யூஸர்கள் மட்டுமே பொது முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பொது டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு கவுண்டர்கள் மூலம், பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரத்தில் தற்போது எந்த மாற்றமும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் புக்கிங் முதலில் ஓபன் ஆகும் நாளன்று காலை 8:00 மணிக்கே log in செய்து புக்கிங் செய்ய நினைத்தால், உங்கள் IRCTC அக்கவுண்ட்டை ஆதாருடன் இணைப்பது உங்கள் முயற்சியை மிகவும் வெற்றிகரமாக மாற்றும். அதே நேரம் நீங்கள் ஒரு IRCTC ஏஜென்ட்டை சார்ந்து இருந்தால், காலை 8:10 மணி முதல் காலை 8:15 மணி வரையிலான நேரம் மிகவும் சிறந்தது. அதாவது அனைத்து யூஸர்களுக்கும் காலை 8:15 மணிக்கு புக்கிங் ஓபன் ஆவதற்குள்ளான அந்த 5 நிமிட குறுகிய நேரம் டிக்கெட் புக்காகும் வாய்ப்பை அதிகரிக்கும். காலை 8:15 மணிக்குப் பிறகு, எல்லா யூஸர்களும் புக்கிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், கணினி மெதுவாகி, டிக்கெட் கிடைக்கும் தன்மை கணிசமாக குறைகிறது.
எனவே, பயணிகள் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பே ஆதார் இணைப்பை முடித்து, தாங்கள் போக விரும்பும் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கும் நாளில் காலை 8:00 மணிக்குள் தங்கள் கணினிகள் அல்லது தொலைபேசிகளில் டிக்கெட் புக் செய்ய தயாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் திருவிழாக்கள் அல்லது குடும்ப நிகழ்வுகளுக்கு ரயில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால், உங்கள் IRCTC அக்கவுண்ட்டுடன் ஆதாரை இணைப்பது, நீண்ட காத்திருப்புப் பட்டியலில் நீங்கள் இணைவதற்கு பதில், உறுதிப்படுத்தப்பட்ட பெர்த் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பை அளிக்கும்.
September 19, 2025 4:57 PM IST
Train Ticket Booking | ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் அக்டோபர் முதல் அமலாக உள்ள முக்கிய மாற்றங்கள்… என்னென்ன தெரியுமா…?
