Tamil Top 10 News: சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்., சாதிவாரி கணக்கெடுப்பை வெறுமனே தேர்தலுக்காகவோ அல்லது அரசியலுக்காகவோ அல்லாமல் தீவிரமாக கையாள வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் கூறுகையில், “நமது இந்து சமுதாயத்தில் நமது சாதி மற்றும் சாதி உறவுகள் பற்றிய உணர்வுபூர்வமான பிரச்சினை உள்ளது. இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியமான பிரச்சினை என்பது உண்மைதான். இது மிகவும் தீவிரமாக கையாளப்பட வேண்டும், தேர்தல் நடைமுறைகள் அல்லது அரசியல் அடிப்படையில் அல்ல. அனைத்து நல நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது சாதிக்கு சிறப்பு கவனம் தேவைப்படும்போது, அரசாங்கத்திற்கு அவர்களின் எண்ணிக்கை தேவை என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது” என்று அம்பேகர் கூறினார். அதேநேரம், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் டாப் 10 செய்திகளை பார்ப்போம்.
