Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tollgate: இன்னும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் டோல் கட்டணம் உயருது! எவ்வளவு தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2024
in அரசியல் செய்திகள்
0
Tollgate: இன்னும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் டோல் கட்டணம் உயருது! எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஏற்றுவதுபோல், டோல்கேட்டிலும் ஒரு நடைமுறை உண்டு.

அதாவது – ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு தடவையாவது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிக் கட்டண விலையை மாற்றியமைக்கும்; அதாவது ஏற்றியமைக்கும். நீங்கள் ஏப்ரல் அல்லது செப்டம்பர் மாதங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். 

இந்த ஆண்டும் அதேபோல் சுங்கச்சாவடிக் கட்டணங்களில் விலையேற்றம் நடக்க இருக்கிறது. போன ஏப்ரல் மாதம் – நமக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம். அதாவது – மக்களவைத் தேர்தல் அறிவிப்பை ஒட்டி, அதை ஜூன் மாதத்துக்குக் கொஞ்சம் தள்ளி வைத்திருந்தார்கள். 

நம் தமிழ்நாட்டில் உள்ள 67 சுங்கச்சாவடிகளில், சுமார் 36 டோல்கேட்களில் கட்டண உயர்வை ஜூன் மாதம் அமல்படுத்தி இருந்தார்கள். இப்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 25 டோல்கேட்களில் கட்டண உயர்வை – இந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்த இருக்கிறார்கள். இதில் 5 முதல் 7 சதவிகிதம் வரை கட்டண உயர்வு அமுல்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக கார்களுக்கும் மற்ற கனரக வாகனங்களுக்கும் சுமார் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் ஏற்றப்படலாம் என்று தெரிகிறது. 

ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடும் கண்டனம். pic.twitter.com/ByxZImlVqZ

— O Panneerselvam (@OfficeOfOPS) August 27, 2024

சுங்கக் கட்டண வசூலில் தமிழ்நாடு போன நிதியாண்டில் சுமார் 4,221 கோடி வசூலித்திருக்கிறது. வசூலைப் பொருத்தவரை இது 5-வது இடம். முதல் இடத்தில் உத்தரப் பிரதேசம், அடுத்து ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள் வரிசையாக இருக்கின்றன. 

இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நம் ஊர் அரசியல்வாதிகளும், விஐபிக்களும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். 

அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‛‛சுங்கக் கட்டணத்தின் நோக்கமே சாலை அமைத்த கட்டணத்தை வசூல் செய்வதற்குத்தான். அதன் பிறகு பராமரிப்புக்காக மட்டும்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், இவர்கள் அதற்கு நேரெதிராகக் கட்டணத்தை  உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே மக்கள் பல வரிகளைக் கட்டி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேறு!’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி: மக்களை பாதிக்கும் உயர்வை கைவிடுங்கள்!#WithDrawTollHike pic.twitter.com/2hQRCLmR6b

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 26, 2024

இவரைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போன்ற பல அரசியல்வாதிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

Tollgate

இந்தக் கட்டண உயர்வால், நிச்சயம் லாஜிஸ்டிக்ஸ் பாதிக்கப்படும். சரக்கு வாகனங்களின் வாடகை உயரும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் எகிறும். கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க நெடுஞ்சாலை ஆணையமே! 





.

Previous Post

National Sports Day: உடல், மன ஆரோக்கியத்துக்கு முக்கியமாக இருக்கும் விளையாட்டு! தேசிய விளையாட்டு தினம் வரலாறு-national sports day 2024 date theme history and significance of this day

Next Post

ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல் சரிபார்ப்பு: யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு அனுமதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல் சரிபார்ப்பு: யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு அனுமதி

ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல் சரிபார்ப்பு: யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In