கன்னி:
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் – தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று மாலை 6.50 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5
துலாம் :
கிரகநிலை:
ராசியில் புதன் , சூர்யன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று மாலை 6.50 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று அரசாங்க அனுகூலம் ஏற்படும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9
விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில் சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் – அயன, சயன, போக ஸ்தானத்தில் – சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று மாலை 6.50 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று நல்ல நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடக்கூடிய நேரம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். காரிய தீர்வு கிடைக்கும். களின் உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3
தனுசு:
கிரகநிலை:
ராசியில் குரு, சனி , கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று மாலை 6.50 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். பலரை திருப்தி படுத்த நீங்கள் பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நல்ல அன்யோன்யம் இருக்கும். வெற்றியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7
மகரம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் – ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று மாலை 6.50 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும் . எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9
கும்பம்:
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று மாலை 6.50 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணம் மேலோங்கும்..ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மீனம்:
கிரகநிலை:
ராசியில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று மாலை 6.50 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
