Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2024
in அரசியல் செய்திகள்
1
கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆகியுள்ளன. இதனால், அரசு இயந்திரம் வழக்கம்போல் செயல்படத்தொடங்கியுள்ளது.

வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்:

இந்நிலையில் வரும் ஜூன் 24ஆம் தேதி முதல், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றும், அன்று முதல்  மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். அதற்கு முன், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்தலாம் என முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இம்முறை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடக்கும் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2024ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடந்தது என்ன?:

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்குப் பின், பிப்ரவரி 13ஆம் தேதி , நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிட ரமணன், கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரன், முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆளுநர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது.

அதன்பின், பிப்ரவரி 15ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் பதிலளித்தார். பின், பிப்ரவரி 19ஆம் தேதி, நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்பின், பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதன்பின் பிப்ரவரி 21ஆம் தேதி நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதன்பின் பிப்ரவரி 22ஆம் தேதி பதிலுரையுடன் அந்த கூட்டத்தொடர் முடிந்தது.

2024 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடந்த பரபரப்பு:

2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்கத் தொடங்கியபோது, தமிழ்நாடு அரசின் சாதனைத் திட்டங்களை முழுவதும் புறக்கணித்தார். அதன்பின், ஆளுநர் வாசிக்காத உரையை சபாநாயகர் அப்பாவு முழு உரையை வாசித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

  • கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கோவையில் மாபெரும் நூலகம் 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் திறக்கப்பட்டது எனக் கூறினார்.
  • மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 13 சட்ட முன்வடிவுகளும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தமுறையும் பல புதுத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

.

Previous Post

‘இரண்டொருவருக்காக ஆண்டது போதும்; இனியாவது இந்தியாவுக்காக ஆளுங்கள்’ -மோடிக்கு முரசொலி சூடு!

Next Post

NDA நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு..சந்திரபாபு நாயுடு, நிதிஷ் ஆதரவு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
NDA நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு..சந்திரபாபு நாயுடு, நிதிஷ் ஆதரவு..!

NDA நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு..சந்திரபாபு நாயுடு, நிதிஷ் ஆதரவு..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    👍👍👍👍👍

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In