இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆண்டாண்டு காலமாக, இஸ்லாமியர் – இந்துக்கள் நல்லுறவு பாதுகாக்கப்படும் கோயில்கள் தமிழ்நாட்டில் 20க்கும் மேல் உள்ளன. இந்த நடைமுறைகளை தகர்க்க வேண்டும், மதவாதத்தை தூண்ட வேண்டும் நோக்கில் முற்படும் சக்திகளை வீழ்த்தும் சக்தியாக முதலமைச்சர் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரத்தில் பனேசாய்பு திருக்கோயில் உள்ளது. இங்கு முதல் மரியாதை இந்துக்களுக்குதான். இந்துக்கள், இஸ்லாமியர்கள் சேர்ந்து தொழும் இடமாக இது உள்ளது. புதுக்கோட்டையில் காவல் தெய்வமாகவே ராவுத்தார் உள்ளார். அவரை தொழுத பின்னர்தான், இந்து சாமிகளை தொழும் நடைமுறை உள்ளது. புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தேர்வடத்தை இஸ்லாமியர்கள்தான் தொட்டு வணங்கி தொடங்கி வைக்கின்றனர். எம்மதமும் சம்மதமே என்று சொல்லும் முதல்வர் ஆட்சியில் நல்லுறவு பேணி காக்கப்படும். அனைத்து வரலாறுகளும் புத்தகமாக தொகுத்து வெளியிட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

❤️❤️❤️❤️❤️