Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tirupati Laddu: "திருப்பதி லட்டு விவகாரம்; கடவுள் பெயரில் அரசியல்" – ஜெகன் மோகன் விளக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2024
in அரசியல் செய்திகள்
0
Tirupati Laddu: "திருப்பதி லட்டு விவகாரம்; கடவுள் பெயரில் அரசியல்" – ஜெகன் மோகன் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பதி லட்டு தயாரிப்பில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் சர்ச்சைக் கிளப்பியிருக்கிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (டிடிபி கட்சி), ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் (ஒய்.எஸ்.ஆர் கட்சி) இருந்தபோது திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்றும் புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர் என்றும் பரபரக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர் ஒய்.எஸ்.ஆர் கட்சியினர்.

இதையடுத்து நேற்று ‘தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம்’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டு மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இது ஜெகன் மோகன் ரெட்டியின் ‘ஒய்.எஸ்.ஆர்’ கட்சிக்குப் பெரும் பின்னடைவாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி, “சட்ட ஒழுங்கில் ஏற்பட்ட பிரச்னைகள், ஆந்திரா வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்னைகளை திசை திருப்புவதற்காகக் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார் சந்திரபாபு.

திருப்பதி லட்டு தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களையும் ‘NABL -National Accreditation Board for Testing and Calibration Laboratories’ ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்புதான் அவற்றைப் பயன்படுத்த முடியும். இதுதவிர அப்பொருட்களெல்லாம் திருப்பதி தேவஸ்தானம் வந்து லட்டாகத் தயாராகி, பக்தர்கள் கைக்குப் போகும்வரை பல கட்ட ஆய்வுகளுக்கும், கண்கானிப்பிற்கும் உட்படுத்தப்படுகிறது. தரமில்லாதப் பொருட்கள் எந்தவித சமரசமின்றி நிராகரிப்படும். இதைக் கண்காணிக்கத் தனிக்குழுவும் இருக்கிறது.

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு

அவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் ஒவ்வொரு பொருட்களையும் கொண்டு வந்து சேர்க்கின்றனர். இப்படி பல கட்ட ஆய்வுகளும், பாதுகாப்புகளும் இருக்கின்றன. இவற்றை மீறி ஒரு தரம் குறைந்தப் பொருட்கள்கூட திருப்பதி தேவஸ்தானத்திற்குள் நுழைய முடியாது.

ஆனால், இவர்களோ விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் என்று ஏதேதோ சொல்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் எவ்வளவு அபத்தமானவை. இந்தக் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம் கூட நியாயம், உண்மை இல்லை. கடவுளை வைத்து அரசியல் செய்வதற்கு அவர்களுக்குக் கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா?” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

ONOE: ”ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலமாக மாநில உரிமைகளைப் பறிக்கிறது பாஜக” – கனிமொழி கண்டனம் | kanimozhi karunanidhi about one nation one election plan by bjp

Next Post

“தமிழகம் திவாலாகி விட்டது; திமுக ‘ஜீ பூம்பா’ படம் காட்டுகிறது” – கே.டி.ராஜேந்திர பாலாஜி காட்டம் | Admk ex minister kt rajendra Balaji speech in anna birthday function

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தமிழகம் திவாலாகி விட்டது; திமுக ‘ஜீ பூம்பா’ படம் காட்டுகிறது” – கே.டி.ராஜேந்திர பாலாஜி காட்டம் | Admk ex minister kt rajendra Balaji speech in anna birthday function

``தமிழகம் திவாலாகி விட்டது; திமுக 'ஜீ பூம்பா' படம் காட்டுகிறது” - கே.டி.ராஜேந்திர பாலாஜி காட்டம் | Admk ex minister kt rajendra Balaji speech in anna birthday function

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In