மதுரையில் தை பூச திரு நாளை முன்னிட்டு நாயக்கர் குல மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் கோலாகலமாக திருமலை நாயக்கருக்கு 441 வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அரண்மனை மட்டுமல்லாமல் மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
அதற்கு முன்னோடியாக 24.1.2024 இன்று மாலை நேரத்தில் இருந்தே நாயக்கர் நாயுடுகள் அமைப்புக்கள் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் பற்றிய போர் வீரம் ஆட்சியின் சிறப்பு ஆலய திருப்பணிகள் ஆகிய வரலாற்று நிகழ்வுகளை நாடக கலைஞசர்கள் மூலம் அவர்களின் நடிப்பின் வாயிலாக விழா நடைப்பெற்றது.
திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் தமிழ அரசின் முன்னாள் தலைமை செயலாளர் திரு. ராம் மோகன் ராவ் நடத்தி வரும் RMR பாசறை நிர்வாகிகள் தமிழ் மாநில நாயுடு பேரவை அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு தலைவர் திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.



