Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

”இதுதான் உண்மை”…திமுக போராட்டம் நடத்தியது இதுக்குத்தான் – போட்டு உடைத்த இ.பி.எஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2024
in Default
1
”இதுதான் உண்மை”…திமுக போராட்டம் நடத்தியது இதுக்குத்தான் – போட்டு உடைத்த இ.பி.எஸ்
53
SHARES
86
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாட்டில் ஜனவரி 1 முதல் தற்போதுவரை 595 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார். 

திமுக மீது இபிஎஸ் விமர்சனம்:

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என, நேற்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் திமுக போராட்டம் நடத்திய நிலையில் , போராட்டம் நடத்தியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் அதிகரிப்பால், கொலைகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை காங்கிரஸ் ஜெயக்குமார் மரண வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஜனவரி 1 முதல் தற்போதுவரை 595 கொலைகள் நடந்துள்ளன. 

”திமுக போராட்டம் இதுக்குத்தான்”

தமிழ்நாட்டில் திமுக மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். விலைவாசி உயர்ந்துவிட்டது. போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை மறைக்கவே, மத்திய அரசு மீது போராட்டத்தை நடத்தியிருக்கிறது. இதுதான் உண்மை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

திமுக போராட்டம்:

பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் மத்திய பாஜக அரசின் மூன்றாவது விதிமுறை அறிக்கை கடந்த 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பேரில், நேற்று திமுக சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

#UnionBudget2024-ல் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை கழகம் இன்று நடத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகளுக்கு – இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட துயர் துடைக்க – தொழில் & நகர்ப்புர வளர்ச்சிக்கு என எதற்கும்… pic.twitter.com/kanatu7djN

— Udhay (@Udhaystalin) July 27, 2024

இந்நிலையில், ” தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், திமுக அரசு மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை மறைக்கவே, மத்திய அரசு மீது போராட்டத்தை நடத்தியிருக்கிறது. இதுதான் உண்மை”  என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Previous Post

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் புதுச்சேரி ஆளுநராக நியமனம்..!

Next Post

என்னப்பா நடக்குது நாட்டுல… கொலை நகரமாக மாறும் தமிழ்நாடு..! இன்று மட்டும் 3 கொலைகள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
என்னப்பா நடக்குது நாட்டுல… கொலை நகரமாக மாறும் தமிழ்நாடு..! இன்று மட்டும் 3 கொலைகள்..

என்னப்பா நடக்குது நாட்டுல... கொலை நகரமாக மாறும் தமிழ்நாடு..! இன்று மட்டும் 3 கொலைகள்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😄😄😄😄

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In