சிவசேனாவில் இருந்து ராஜ்தாக்கரே கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்த பிறகு உத்தவ் தாக்கரேயுடனோ அல்லது சிவசேனாவுடனோ ராஜ்தாக்கரே எந்த வித தொடர்பும் வைத்துக்கொண்டதில்லை. பல முறை இரண்டு பேரையும் கூட்டணிக்கு கொண்டு வர இரு கட்சி தலைவர்களும் முயற்சி எடுத்தனர். ஆனால் எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை.
.ஆனால் இப்போது ராஜ்தாக்கரே தேர்தலில் படுதோல்வி அடைந்து எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் இருக்கிறார். உத்தவ் தாக்கரேயும் சொந்த கட்சியை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் இழந்துவிட்டு இப்போது தனி மரமாக நிற்கிறார். இதையடுத்து முதல் முறையாக இருவரும் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான முதல் அடியை ராஜ்தாக்கரே எடுத்து வைத்திருக்கிறார்.
`இந்தி’யா… மராத்தியா?
மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டபோது மராத்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஜ் தாக்கரே இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படத்தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே தானும் ராஜ்தாக்கரேயுடன் இணைந்து செயல்படத்தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்போது ராஜ்தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் தங்களது குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். ராஜ்தாக்கரே வரும் 29ம் தேதி நாடு திரும்புகிறார். உத்தவ் தாக்கரே மே 4ம் தேதி நாடு திரும்புகிறார். அவர்கள் இருவரும் நாடு திரும்பிய பிறகு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை நிரூபிக்கும் வகையில் சிவசேனா(உத்தவ்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,”‘மராத்தி மற்றும் மகாராஷ்டிரா நலனுக்காக ஒன்று சேர இதுவே சரியான தருணம். மராத்தியின் பெருமையை பாதுகாக்க சிவசேனா தொண்டர்கள் தயாராக இருக்கின்றனர்”என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
