கடந்த 2008 – ம் ஆண்டு முதல் அரசியலுக்கான காய் நகர்த்தலை செய்து வந்த விஜய், தற்போது த.வெ.க கட்சியைத் தொடங்கி வரும் 2026 – ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வலதுகாலை எடுத்து வைக்க இருக்கிறார். இதற்கு முன்பு, விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் 2008-ம் ஆண்டு முதலே அரசியலுக்கான காய்களை நகர்த்தி வந்த நடிகர் விஜய், தற்போது த.வெ.க கட்சியை உருவாக்கி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களம் இறங்க இருக்கிறார்.
இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் இரண்டாம் மாநில மாநாடு நடத்தினார். இப்போது, தனது முதல் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலிருந்து தொடங்கவிருக்கிறார்.

விஜய் தனது முதல் பிரசார நிகழ்வுக்குத் திருச்சியைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகிறார்கள்:
-
1920-ல் திருச்சியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
-
1956-ல் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் திருச்சியில் தி.மு.க மாநாடு நடந்தது. அப்போது அண்ணா தலைமையில் “தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா” என்ற முக்கிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்பின்னரே தி.மு.க தேர்தல் அரசியலில் நுழைந்து இன்று ஆட்சிக்கட்டிலில் உள்ளது.
-
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கே மாற்ற நினைத்தார். அதற்காக திருச்சியில் ஒரு பங்களாவையும் வாங்கினார். இன்றும் அந்த பங்களா அ.தி.மு.க கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
-
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வெற்றிபெற்றார். “ஸ்ரீரங்கம்தான் எனக்குப் பூர்வீகம்” என்று அவர் பெருமையுடன் கூறியிருந்தார்.
