Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கரூரிலிருந்து விஜய் வெளியேற இதுதான் காரணம்” – உச்சநீதிமன்றத்தில் தவெக வாதம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2025
in அரசியல் செய்திகள்
0
“கரூரிலிருந்து விஜய் வெளியேற இதுதான் காரணம்” – உச்சநீதிமன்றத்தில் தவெக வாதம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூரில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு மற்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரியது உள்பட

ஐந்து மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.

தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம் மற்றும் அரியமா சுந்தரம் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். குறிப்பாக  பிரச்சாரத்திற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பிரச்சாரம் நடைபெற்றதாகவும் தவெக தரப்பு வாதிட்டது.

மேலும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை (விஜய்) சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, ‘இவர் எப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார்’ என்று விமர்சனங்களை உயர் நீதிமன்றம் வைத்ததாகக் குற்றம் சாட்டினர்.

“விஜய், சம்பவம் நடைபெற்றவுடன் தப்பித்துச் சென்றதாக அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. காவல்துறை பாதுகாப்புடன், அதிகாரிகள் அறிவுறுத்திய வழியில்தான் விஜய் வாகனம் வெளியேறியது,” என்று மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் தனது வாதத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து அமர்வில் இருந்த நீதிபதிகள் சில முக்கியக் கேள்விகளை எழுப்பினர். “இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது. அப்படி இருக்கையில், சென்னையில் இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை விவரிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், விசாரணை வரம்புக்குள் வராத ஒரு வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுடைய அனுமதி பெற்றே விசாரணைக்கு எடுக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் பெறப்பட்டதாகத் தகவல் இல்லை என்று தெரிவித்தார்.

“சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் விஜய் அல்லது தவெக எதிர்மனுதாரராக உள்ளனரா?” என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்குத் தவெக தரப்பு, “இந்த வழக்கில் விஜய் அல்லது அவரது கட்சியோ எதிர்மனுதாரராக இல்லை” என்று பதிலளித்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

October 10, 2025 1:00 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன்தான் விஜயின் பிரச்சாரம் நடந்தது” – உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பு வாதம்



.

Previous Post

`இவரால 30, 40 பொண்ணுங்க பாதிக்கப்பட்டு இருக்காங்க’ |Puducherry University Protest: Police Brutally Assault Students Alleging Sexual Misconduct by Professors

Next Post

“பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்” – பைக் மோதிய விவகாரம் குறித்து தலைவர் திருமாவளவன் | “We need to find out the conspiracy behind it” – Thirumavalavan on the bike collision issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்” – பைக் மோதிய விவகாரம் குறித்து தலைவர் திருமாவளவன் | “We need to find out the conspiracy behind it” – Thirumavalavan on the bike collision issue

``பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்" - பைக் மோதிய விவகாரம் குறித்து தலைவர் திருமாவளவன் | ``We need to find out the conspiracy behind it'' - Thirumavalavan on the bike collision issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In