Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட தடை! பல்கலைக்கழகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு! காரணம் இதுதான்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2023
in அரசியல் செய்திகள்
0
பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட தடை! பல்கலைக்கழகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு! காரணம் இதுதான்!
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

International oi-Nantha Kumar R
Published: Thursday, June 22, 2023, 0:31 [IST]
இஸ்லாமாபாத்: இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு திடீரென்று பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஹோலிக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்துக்களின் பண்டிகையாக உள்ள ஹோலி மார்ச் மாதம் கொண்டாடப்படும். இந்த ஹோலி கொண்டாட்டத்தின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. பனிக்காலத்துக்கு குட்பை சொல்லிவிட்டு வெயில் காலத்தை வரவேற்றல் என்பது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிக்கும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஆன்மிக ரீதியாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை விட வடஇந்திய மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசுவார்கள். இந்த சமயத்தில் ஏழைகள், பணக்காரர்கள் என்ற பாகுபாட்டை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் திடீரென்று ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமாபாத்தில் உள்ள க்வாய்ட்-இ-ஆசாம் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 12ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடினர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவின் அடிப்படையில் தான் ஹோலி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‛‛இஸ்லாத்தின் கலாச்சாரம் மற்றும் தார்மீக விழுமியங்களை நிலைநிறுத்தும் வகையில் இளைஞர்களை மாற்றுவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. ஆனால் நாட்டின் சமூக-கலாச்சார விழுமியங்களை மீறுவதோடு, இஸ்லாமிய அடையாளத்தை பாதிக்கும் ஹோலி போன்ற பண்டிகையை கொண்டாடப்படுவதை பார்ப்பது வருத்தமாக உள்ளது. இது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது நாட்டின் நற்பெயருக்கு பாதகமானது. இதனால் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” எனக்கூறி தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையத்தின் இந்த அறிவிப்பு என்பது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Holi, a festival celebrated in India, has been banned in Pakistani universities. A strict order has been issued banning Holi to prevent damage to Islamic identity.
Story first published: Thursday, June 22, 2023, 0:31 [IST]

.

Previous Post

`சாலை வரியை உயர்த்த திமுக அரசு திட்டம்?’ – பாதிப்புகளை பட்டியலிட்டு எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்! |The DMK govt planning to raise the road tax,Opposition parties list out the effects

Next Post

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In