Last Updated:
இந்தியாவிலேயே தொடக்க நிலை ஊழியர்கள் அதிக ஊதியம் பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு பெருமை கிடைத்துள்ளது. ஆயிரத்து 311 ஊழியர்கள் மற்றும் 2 ஆயிரத்து 531 பணி வழங்குபவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தியாவிலேயே தொடக்க நிலை ஊழியர்கள் அதிக ஊதியம் பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு பெருமை கிடைத்துள்ளது.
வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு தளமான இன்டீட் நிறுவனம், பல்வேறு துறைகளில் பணிபுரிவோருக்கான ஊதியம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆயிரத்து 311 ஊழியர்கள் மற்றும் 2 ஆயிரத்து 531 பணி வழங்குபவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், நாட்டிலேயே புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் நகரமாக சென்னை இருப்பது தெரியவந்துள்ளது. முன் அனுபவம் எதுவும் இல்லாதவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் வரை சென்னையில் 30 ஆயிரத்து 100 ரூபாயை ஊதியமாக பெறுகின்றனர்.
அடுத்தபடியாக ஐதராபாத்தில் இடைநிலை மற்றும் சீனியர் லெவல் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது. எனினும் நகரத்தில் வாழ்வதற்கான செலவை ஈடுசெய்யும் வகையில் தங்கள் ஊதியம் இல்லை என பொதுவாக அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 08, 2025 6:41 PM IST
நாட்டிலேயே ஃப்ரெஷர்ஸ்க்கு அதிக ஊதியம் தரும் நகரம் இதுதான்.. சென்னைக்கு என்ன இடம்? – ஆய்வில் தகவல்!

