Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘ஆர்.எஸ்.எஸ். எனக்கு கற்றுத் தந்த பாடம் இதுதான்..’ – பெருமையுடன் பகிரும் பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 17, 2025
in அரசியல் செய்திகள்
0
‘ஆர்.எஸ்.எஸ். எனக்கு கற்றுத் தந்த பாடம் இதுதான்..’ – பெருமையுடன் பகிரும் பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 16, 2025 9:01 PM IST

எனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியதில் ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ். இன் சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனக்கு வாழ்வில் கற்றுத் தந்த பாடங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாட் காஸ்ட் நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். 

அமெரிக்க எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கேள்விக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலமாகத்தான் நான் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்தேன். புனிதமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வாழ்க்கையின் மதிப்புகளை எனக்குக் கற்றுத் தந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் துறவிகளுடன் நேரத்தைச் செலவிட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவர்கள் எனக்கு ஆழமான ஆன்மீக அடிப்படையை ஏற்படுத்தித் தந்தனர். வாழ்வில் ஒழுக்கத்தையும் வாழ்வின் நோக்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து கற்றுக் கொண்டேன். துறவிகளின் வழிகாட்டுதலால் எனது ஆன்மீகத் தேடல் விரிவடைந்தது.

எனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியதில் ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ். இன் சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. எதைச் செய்தாலும் அதனை ஒரு நோக்கத்துடன் செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ். எனக்குக் கற்றுத் தந்தது. படிக்கும்போது கூட அந்தப் படிப்பு நாட்டுக்குப் பலன் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்தாலும் உங்களது உடலை வலிமைப்படுத்தி, நாளும் அது நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குக் கற்றுத் தந்தது.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப் பெரிய அமைப்பாக வளர்ந்துள்ளது. அந்த அமைப்பு தனது நூறாவது ஆண்டு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வாழ்க்கையின் நோக்கத்தைக் கற்றுத் தந்தது. நாடுதான் அனைத்துக்கும் மேலானது. மக்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்வதைப் போன்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.

இதையும் படிங்க – ‘கனவிலும் நினைத்துப் பார்த்திட முடியாத சம்பவம்’ – 2002 கோத்ரா வன்முறை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி

தொழிலாளர் அமைப்புகளையும் சித்தாந்தக் கொள்கை உடையவர்களாக மாற்றியது ஆர்.எஸ்.எஸ். வரலாற்று ரீதியாக இடதுசாரி அமைப்புகள் தான் தொழிலாளர்கள் அமைப்பில் செல்வாக்கு செலுத்தி வந்தன. அதனையும் ஆர்.எஸ்.எஸ். மாற்றிக் காட்டியது” என்று தெரிவித்தார்.

First Published :

March 16, 2025 8:34 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘ஆர்.எஸ்.எஸ். எனக்கு கற்றுத் தந்த பாடம் இதுதான்..’ – லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பெருமிதம்



.

Previous Post

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!

Next Post

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையின் அழகை புகைப்படம்
எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In