Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வரலாற்றில் இடம் பெறும் அதிஷி.. டெல்லி சட்டமன்றத்தில் இது தான் முதல் முறை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 23, 2025
in அரசியல் செய்திகள்
0
வரலாற்றில் இடம் பெறும் அதிஷி.. டெல்லி சட்டமன்றத்தில் இது தான் முதல் முறை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 23, 2025 2:57 PM IST

டெல்லி சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக ஆம் ஆத்மியின் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News18News18
News18

டெல்லி சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக ஆம் ஆத்மியின் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டன. மூன்று முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடித்து பாஜக மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை கைப்பற்றியது.

ஆம் ஆத்மியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல முக்கிய தலைவர்களும் தோல்வியைச் சந்தித்தனர். அதேசமயம், அக்கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷி வெற்றி பெற்றார். இவர் உட்பட மொத்தம் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 22 இடங்களை கைப்பற்றியிருந்தது.

தேர்தல் முடிவுகள் கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டபின் பாஜக தனது முதல்வரை தேர்ந்தெடுக்க ஏறத்தாழ 10 நாட்கள் எடுத்துக்கொண்டது. அந்த பத்து நாளில் பாஜக முதல்வர் இவர்தான் என பலரின் பெயர்கள் பேசப்பட்டன. ஆனால், இறுதியில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக ரேகா குப்தாவை முதல்வராக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ரேகா குப்தா டெல்லியின் 9வது முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதேசமயம், 22 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி டெல்லி சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. இதில் எதிர்க்கட்சியின் சட்டமன்றத் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிஷி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. அந்த பெருமையை அதிஷி பெற்றுள்ளார். இதன் மூலம், டெல்லி சட்டமன்றத்தில் ஒரு பெண் முதல்வரை எதிர்த்து பெண் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்ய இருக்கிறார்.

இதையும் படியுங்கள் : Snow cricket | காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு புதிய அத்தியாயம்; இளைஞர்களை கவரும் பனி கிரிக்கெட்…!

வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வராக ரேகா குப்தாவின் செயல்பாடுகளும், எதிர்க்கட்சித் தலைவராக அதிஷியின் செயல்பாடுகளும் அதிகம் கவனிக்கப்பட இருக்கிறது. ஆகவே டெல்லியில் இரு பெண் தலைவர்களின் சட்டமன்ற நடவடிக்கைகள் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

First Published :

February 23, 2025 2:57 PM IST



.

Previous Post

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

Next Post

மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In