சாலையில் கயிறு மூலம் தடுப்பை ஏற்படுத்தி அதற்கு மேல் எந்தப் பத்திரிகையாளரும் வரக்கூடாதெனக் கடுமையாகவும் கூறினார். பூங்காவினுள் காவல்துறையினர் இறங்கி பெண்களைக் கைது செய்கையில் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததால் விஜயகுமாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, “உங்களை விட்டா நீங்க எங்களோட பணியைச் செய்யத் தடையா இருப்பீங்க. அதான் தடுக்குறோம்’ என்றார். பதிலுக்குப் பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து, ‘இது என்ன சார் புதுசா இருக்கு. எங்களை எங்க வேலையைச் செய்ய விடுங்க’ எனக் கேட்கையில், ‘இதுதான் உத்தரவு. வேணும்னா அப்பீல் போயிக்கோங்க’ எனக் கூறிவிட்டு பெண்களைக் குண்டுக்கட்டாக கைது செய்வதை மேற்பார்வையிடச் சென்றார்.

இணைய ஆணையருக்கு எதிராக சென்னைப் பத்திரிகையாளர் மன்றமும் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

