Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சி!! தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள் சொல்லும் கணக்கு இதுதான்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2024
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சி!! தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள் சொல்லும் கணக்கு இதுதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகள் உள்ளிட்டவைகளுக்கு வாக்கு பதிவு நடந்தது.

இந்நிலையில் இன்று 7-ஆவது கட்டமாக வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி மற்றும் சர்வே நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஆளும் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேவேளையில், இந்திய தேசிய காங்கிரசு 52 இடங்களையும், காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 87 இடங்களைக் கைப்பற்றியது. ஏனைய கட்சிகள் 103 இடங்களைக் கைப்பற்றின.

தற்போது பாஜக கூட்டணி தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதனை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

விளம்பரம்

அதன்படி டைம்ஸ் நவ் மற்றும் – இ.டி.ஜி நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி 386 தொகுதிகளிலும், INDI கூட்டணி 118 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 359 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 154 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க – தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது… எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு?

NDTV கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 371 தொகுதிகளையும், I.N.D.I.A கூட்டணி 125 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நியூஸ் எக்ஸ், இந்தியா நியூஸ் செய்தி நிறுவனங்களும் இதே இடங்களை குறிப்பிட்டுள்ளன.

விளம்பரம்

ஜன் கி பாத் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 362 முதல் 392 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 141 முதல் 161 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று மற்ற பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

.



.

Previous Post

`இரட்டை இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடிக்குச் சமர்ப்பிக்க இருக்கிறோம்!’ – எல்.முருகன் | Minister l murugan press meet at madurai

Next Post

நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக் கட்டணம் – மத்திய அரசின் அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம்! |increase toll charges in all over india announced central government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக் கட்டணம் – மத்திய அரசின் அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம்! |increase toll charges in all over india announced central government

நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக் கட்டணம் - மத்திய அரசின் அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம்! |increase toll charges in all over india announced central government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In