Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இது தனிப்பட்ட குடும்ப பயணம். அரசியல் ரீதியிலானது கிடையாது” – ராஜ் தாக்கரே | Brothers strengthening alliance: Raj Thackeray attended Uddhav Thackeray’s house party with family

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2025
in அரசியல் செய்திகள்
0
“இது தனிப்பட்ட குடும்ப பயணம். அரசியல் ரீதியிலானது கிடையாது” – ராஜ் தாக்கரே | Brothers strengthening alliance: Raj Thackeray attended Uddhav Thackeray’s house party with family
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக முதலில் ஒன்று சேர்ந்து போர்க்கொடி தூக்கினர். அதுவே அவர்கள் மீண்டும் இணைய காரணமாக இருந்தது.

இதையடுத்து மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதற்காக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்.

ஒவ்வொரு சந்திப்புக்கும் எதாவது ஒரு காரணம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் வரும்போது இருவரும் அதனை தவறவிடுவதில்லை. கடந்த சில மாதங்களில் இருவரும் 5 முறை சந்தித்து பேசி இருக்கின்றனர்.

தற்போது 6வது முறையாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளனர். இம்முறை இரண்டு குடும்பமும் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறது. ராஜ் தாக்கரே தனது தாயார் உட்பட குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்திருந்தார்.

குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வந்த ராஜ் தாக்கரேயிடம் மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, “‘என்ன தேர்தல், எனது தாயார் என்னுடன் இருக்கிறார். புரிந்து கொள்ளுங்கள். இது தனிப்பட்ட குடும்ப பயணம். அரசியல் ரீதியிலானது கிடையாது” என்று தெரிவித்தார்.

ராஜ் தாக்கரே கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவருடன் இருக்கும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் இது குறித்து அளித்த பேட்டியில், ”தாக்கரே சகோதரர்கள் சந்தித்து பேசுவதை பார்த்து எனக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மராத்தியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, “தீபாவளி நேரத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்வது வழக்கம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார். ஆனாலும் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது அவர்களிடையேயான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ராஜ் தாக்கரே கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.கவை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் பா.ஜ.க அவரை கைவிட்டுவிட்டது. இதையடுத்து ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் கைகோர்த்துள்ளார்.



.

Previous Post

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! – நடவடிக்கையா… நாடகமா…?

Next Post

“பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" – விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" – விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In