நடிகர் கமல் ஹாசனின் பேச்சுக்கு நானி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்காக புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, ஹிட் – 3 படத்திற்காக நேர்காணலில் பேசிய நடிகர் நானி, “நடிகர் கமல் ஹாசனின் திரைப்படங்களிலிருந்து இன்றைய நடிகர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். விருமாண்டி திரைப்படத்தில் நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருப்பவர் திடீரென எழுந்து, தன் வாயைச் சரிசெய்வார். கமல்ஹாசன் அந்த அளவிற்கு நுட்பமான நடிகர். ஒரு நடிகராக நான் வியக்கும் காட்சி அது.” என்றார்.