Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இது மிகவும் சீரியசான பாதுகாப்பு அத்துமீறல்: கனிமொழி கடும் குற்றச்சாட்டு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 13, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இது மிகவும் சீரியசான பாதுகாப்பு அத்துமீறல்: கனிமொழி கடும் குற்றச்சாட்டு..!
33
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்ற மக்களவையில் வண்ண புகை குண்டு வீசப்பட்டது திட்டமிட்ட தாக்குதல் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (டிசம்பர் 13)  குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் அவைக்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். அதில் இருந்து மஞ்சள் புகை வெளியேறியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் அவை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறும்போது, “பார்வையாளர்கள் மாடத்திலிருந்து இருவர் அவைக்குள் குதித்தார்கள். அதில் ஒருவரை அங்கிருந்த அவைக்காவலர் உடனடியாக பிடித்துவிட்டார். மற்றொருவர் அவையில் இருந்த மேஜை மேல் தாவி குதித்தார். இருவரும் தங்கள் கையில் புகை வெளியிடும் சிலிண்டர் வைத்திருந்தனர்.

இது மிகவும் சீரியசான பாதுகாப்பு அத்துமீறல். அவர்கள் கையில் துப்பாக்கியோ, வெடிகுண்டோ எடுத்து வந்தால் எங்களது நிலை என்னாகும். நாடாளுமன்றத்தில் ஒரு பேனா கூட எடுத்து போக முடியாது.

இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால் இது ஒரு திட்டமிட்ட நிகழ்வு தான். கேலரியில் இருந்து குதிப்பதற்கு இடைவெளி மிக குறைவாக இருக்கிறது என்று இன்று தான் தெரியவந்துள்ளது. அதனை யாரும் சிந்தித்து கூட பார்க்கவில்லை. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

மக்களவை மீண்டும் கூடியது: பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஓம் பிர்லா சந்திப்பு.

Next Post

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்துங்க..! – EPS காட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்துங்க..! – EPS காட்டம்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்துங்க..! - EPS காட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In