இதனால் காவல்துறை, ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரார்கள் தாக்குதலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் அத்துமீறி உச்சி மலையை நோக்கி சென்றவர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் தீபம் ஏற்ற உத்தரவு” என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள கார்த்திகை தீபம் ஏற்ற சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் 50 பேருடன் மனுதாரரான இந்து மக்கள் கட்சி தரப்பு புறப்பட்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து முன்னணி, இந்து தமிழர் கட்சி மற்றும் இந்து அமைப்பினர் அதிதீவிரம் காட்டி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
