தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அப்போதே ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்கிற முழக்கதை முன்வைத்தேன். நெய்வேலியில் முதல் முதலாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட போது நான் முன்வைத்த முழக்கம் ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்!’ என்பதே. அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சொல்கிற துணிச்சல் இருக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகளே.’ என பேசியிருந்தார்.

அந்தப் பதிவை சில நீக்கியும் விட்டார். இந்நிலையில் வீடியோ நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘வீடியோவை அட்மின் பதிவிட்டிருப்பார். அதைப்பற்றி எனக்கு தெரியாது ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற நிலைப்பாடு நீண்டகாலமாக உள்ளது.’ என திருமாவளவன் கூறியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். அதுவே கூட்டணிக்குள் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் திடீரென திருமாவளவனின் X தளத்தில் பதிவிடப்பட்ட வீடியோவும் அதன் நீக்கமும் மீண்டும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
