Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2025
in அரசியல் செய்திகள்
0
மகளிர் உரிமைத் தொகை: “புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்"- உதயநிதி சொன்ன அப்டேட்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலார்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்கே சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த மழைக்காலத்தை சமாளிக்க முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொட்டித் தீர்த்த பருவமழை
கொட்டித் தீர்த்த பருவமழை

இதுகுறித்துப் பேசியிருக்கும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதையடுத்து இரண்டு நாளில் இன்னொரு மழையும் வரலாம் என்று வானிலையாளர்கள் கூறுகிறார்கள். அது வலுவடை வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.”

பேரறிஞர் அண்ணா, ‘மக்களிடம் செல், மக்களிடம் பழகு, மக்களோடு பேசு, மக்களுக்கு சேவை செய், அவர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்’ என்று நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

அதை மனதில் வைத்து இந்த மழைக்காலத்தில் பணியாற்ற வேண்டும். மழைக்கால பணிகளைச் செய்து வருகிறோம். அப்போது தொடர்ந்த மழையால் அங்காங்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. ஆய்வுக்காக நான் களத்திற்குச் செல்லும்போதெல்லாம் மக்கள்,
“எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியிருக்கு, வந்து பாருங்க” என கோபமாக அல்லாமல் அன்புக் கோரிக்கையாக வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கூப்பிடுகிறார்கள்.
“நீங்கள் வந்து பார்த்தீங்கனா எல்லாம் சரியாக நடக்கும், அதிகாரிகள், கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என சொல்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

“பாதிப்புகள், தவறுகளை முதல்வர் கேள்வி கேட்டால் உடனே நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இந்த மழையில் மக்களோடு நாம் நிற்க வேண்டும். என்றும் அவர்களுக்காக நாம் நிற்போம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்,” என்று பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?



.

Previous Post

“காங்கிரஸ் கட்சியை மதித்தால் முதலமைச்சராக வர முடியும். இல்லையென்றால் முன்னாள் முதல்வராகவே இருக்க முடியும்.” – மாணிக்கம் தாகூர்

Next Post

‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் அழுதது நாடகமா?’ – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் | Minister Anbil Mahesh answers the question, ‘Was crying during the Karur stampede incident a drama?’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் அழுதது நாடகமா?’ – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் | Minister Anbil Mahesh answers the question, ‘Was crying during the Karur stampede incident a drama?’

'கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் அழுதது நாடகமா?' - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் | Minister Anbil Mahesh answers the question, 'Was crying during the Karur stampede incident a drama?'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In