Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பல கட்சிகளுக்கு பிரசாரம் எப்படி செய்ய வேண்டும் என்பது கார்ப்பரேட் தான் வழிமுறை சொல்கிறார்கள். ” – பெ.சண்முகம் | P Shanmugam CPM leader talks about his politics and family

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2025
in அரசியல் செய்திகள்
0
“பல கட்சிகளுக்கு பிரசாரம் எப்படி செய்ய வேண்டும் என்பது கார்ப்பரேட் தான் வழிமுறை சொல்கிறார்கள். ” – பெ.சண்முகம் | P Shanmugam CPM leader talks about his politics and family
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“வீட்டில் ஒரே மகன் என்ற முறையில் அரசியலுக்கு செல்கிறேன், போராட்டம் செய்யப் போகிறேன் எனும் பொழுது வீட்டில் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?”

“அவ்வளவு சுலபமாக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போயும் போயும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போகிறானே அங்க போய் சம்பாதிக்க முடியாது. வெட்டியாக போய்விடும் என்று என் தந்தை யோசித்தார். ஒரு கட்டத்தில் அவர் தெரிந்து கொண்டார் கல்லூரியில் போராட்டம் நடத்துவது, ஒருமுறை தேர்தல் வேலைக்காக சென்று இருந்த போது கடிதம் வந்து ஆளே காணாமல் போய்விட்டார் என்று சொன்னது என்று நான் கம்யூனிஸ்ட் கட்சியில் வேலை செய்கிறேன், போராட்டம் செய்கிறேன் என்று அவர்களுக்கு தெரியும்.

வீட்டிற்கு ஒரே பையன், விவசாய தொழிலாளி குடும்பம், கிராமத்திலேயே இரண்டாவது பட்டதாரி நான்தான் அப்படி இருக்கும்போது குடும்பத்தில் இயல்பாக ‘எப்படியாவது வேலைக்கு போய் நம் பிள்ளை நம் குடும்பத்தை உயர்த்துவான் நாம் நிம்மதியாக இருக்கலாம்’ என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எல்லா பெற்றோர்களைப் போலவே, என்னுடைய பெற்றோர்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. வேலைக்கு சென்று கொண்டே கட்சியும் பார்க்கக் கூடாதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. வீட்டிற்கு நான் ஒரு செல்லப்பிள்ளை, அதனால் அவர்கள் கடுமையாக என்னை எதுவும் கேட்கவில்லை.

திமுக, அதிமுகவில் அரசியலில் இருக்கிறவங்க எல்லாம் தொழில் செய்து கொண்டே அரசியலையும் ஒரு தொழிலாக செய்து கொண்டிருப்பார்கள். கம்யூனிஸ்டு கட்சி அப்படி கிடையாது முழு நேர ஊழியர் என்றால் முழுக்க முழுக்க அதைத்தான் செய்ய முடியும். சொல்லப்போனால் முழு நேர ஊழியரிலிருந்து விடுவித்தால் வேற வேலையே எங்களுக்கு தெரியாது. நான் 40 வருடமாக இதில் பயணிக்கிறேன், திடீரென்று வெளியே வந்து விட்டால் வேறு என்ன செய்வது என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான்.”

“எதிர்பாராமல் அரசியலில் வந்து விட்டீர்கள், கொஞ்சம் காலம் வந்த பிறகு தெரியாமல் இதற்குள்ளே வந்து விட்டோம் என்று நினைத்து உள்ளீர்களா?”

“நிச்சயமாக இல்லை. ரொம்ப சரியான பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். மக்கள் முகங்களில் ஏற்படுகின்ற அந்த மலர்ச்சி, பாதிக்கப்பட்டவனுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி தருவது, மக்கள் நம்மை கொண்டாடுவது இதையெல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு கணம் கூட திரும்பிப் போக வேண்டும் என்று நினைத்ததில்லை. மிகுந்த மன மகிழ்ச்சியோடும், இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்கிற முறையில் தான் ஒவ்வொரு நிகழ்வும் என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது. ஐயோ தவறு செய்து விட்டோம், தவறான முடிவெடுத்து விட்டோம் என்று ஒரு கணம் கூட நான் நினைத்ததில்லை.”



.

Previous Post

‘எடப்பாடியை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை’ துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!

Next Post

பாலமேடு ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலமேடு ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In