Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசிய விவகாரம் – இதுவரை 4 பேர் கைது..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 13, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசிய விவகாரம் – இதுவரை 4 பேர் கைது..!
41
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

 

தில்லி: மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.

‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.

இவர்களை மடக்கிப் பிடித்த எம்பிக்கள் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே புகைக் குண்டுகளை வீசிய ஒரு பெண் உள்பட இருவரையும் காவல்துறையினர் கைதுச் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் பார்வையாளராக பங்கேற்பதற்கு எம்பியின் பரிந்துரை கடிதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும்.

இந்த நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சஹார் சர்மா என்பவருக்கு பிரதாப் சிம்ஹா அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய மக்களவை உறுப்பினர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.


.

Previous Post

மஹாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி உரிமையாளர் கைது..!

Next Post

அரசு அதிகாரிகளும் நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசு அதிகாரிகளும் நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு.

அரசு அதிகாரிகளும் நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பாராளுமன்ற அவை குழுக்குள் புகை குண்டுகளூடன் வெளி நபர்கள் நுழைந்து இருப்பது மிகவும் வருத்தப்பட வேண்டியது பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது தெரியவில்லை இது மிகவும் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதையே காட்டுகிறது எனவே இந்த பாதுகாப்பு அலுவலகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஏதேனும் காரணம் சொல்லத்தான் செய்வார்கள் அதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கக் கூடாது அநேகமாக பாதுகாப்பு அதிகாரிகள் விலை போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In