Monday, November 2, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தண்டிக்க இந்திய அளவில் சதி நடந்தது” – டி.டி.வி.தினகரன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தண்டிக்க இந்திய அளவில் சதி நடந்தது” - டி.டி.வி.தினகரன்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெயலலிதா மரணம் அடையும்வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக, இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். தமிழக அரசியல் வரலாறு, ஜெயலலிதா என்னும் ஆளுமை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட தெரியாமல், வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். கடந்த 91-96-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் போட்டனர். அதையெல்லாம் அவர் தவிடு பொடியாக்கினார். இந்திய அளவில் நடந்த சதியால் தான் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்றுவதற்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்து விட்டு அண்ணாமலை பேசி வருகிறார். வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜெயலலிதாவிடம் அன்பாக பழகினார்கள். தொட்டில் குழந்தை திட்டத்திற்காக, மதர் தெரசா வீட்டிற்கு வந்து நேரடியாக ஜெயலலிதாவை பாராட்டி விட்டுச் சென்றார்.

ஜெயலலிதா

பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்கள் வளர்ச்சிக்காகவும், மாணவர்கள், இளைஞர்கள் வாழ் வாதாரத்திற்காகவும் விவசாயிகளுக்காகவும், 69% இடஒதுக்கீட்டை பின்தங்கிய மக்களுக்காக பெற்றுத் தந்தவர். அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையின் சாதனையை கண்டு தான், காழ்ப்புணர்ச்சியால் வழக்கு போட்டனர். இருப்பினும் ஜெயலலிதா மரணம் அடையும்வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக, இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஏற்கெனவே அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணையின் அடுத்த கட்டமாக அவர் வீட்டிற்கு ரெய்டு வந்திருக்கின்றனர். மருத்துவ பொது கலந்தாய்வு அறிவிப்பினை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள், அதே மாநிலத்தில் படிப்பது தான் வசதியாக இருக்கும். எனவே, பழைய நடைமுறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் அது போன்ற திட்டங்களை அனுமதிக்க கூடாது.

டி.டி.வி.தினகரன்

அமைச்சர் துரைமுருகன் பொதுப்பணி துறையில் நீண்ட நாள் அனுபவம் உள்ளவர். தமிழக முதல்வர் எந்த காரணத்தைக் கொண்டும், விவசாயிகள் மற்றும் ஜீவாதாரப் பிரச்னை என்பதால் பின் வாங்காமல் காவிரி தண்ணீரை கேட்டு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா என்றால் கூட யார் எனக் கூட கேட்பார். நான் உருவாக்கியவர் அவர், ஜெயலலிதாவை விட நான் சீனியர் என்றுக் கூட எடப்பாடி பழனிசாமி சொல்லுவார்” என்றார்.

ஓபிஎஸ் – டிடிவி: திருமண விழாவில் திருப்பம் – கழுகார் – கல்விக் கடன்: 5 விஷயங்கள் – ‘லியோ’ Exclusive

.

Tags: அளவலஇநதயசதசததககவபபட.ட.வ.தனகரனதணடககநடநததவழககலஜயலலதவ
Previous Post

Cuddalore : உல்லாசம்.. 3 ஆண்டு காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன்.. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி.. நடந்தது என்ன?

Next Post

மணிப்பூரில் இணையத் தடைக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூரில் இணையத் தடைக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்  நிராகரிப்பு.

மணிப்பூரில் இணையத் தடைக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In