இந்த நிலையில் எங்களுக்கு நகராட்சியுடன் இணைவதில் உடன்பாடில்லை எனக் கூறியும், அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு பதாகைகளுடன் விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் இல்லத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர், எம்.எல்.ஏ சீனிவாசனிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, `இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட கிராம மக்கள், மீண்டும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மேலும், அவர்களின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இது குறித்து கிராம மக்கள் சிலரிடம் பேசினோம். அப்போது, “சிறப்பு நிலை நகராட்சியாக எங்கள் கிராம அறிவிக்கப்பட்டால், எங்களுக்கு தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தினமும் கிடைக்கும் 200 ரூபாய், கலைஞர் கனவு இல்லத் திட்டம், பிரதம மந்திரி திட்டம் , ஆடு மாடுகள் வழங்கும் திட்டம் போன்ற ஊராட்சிகளுக்கான நலத் திட்டங்கள், மறுக்கப்படும். எனவே, எங்களால் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
