உத்தரபிரதேச மாநிலம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. 3-வது ஆண்டாக இந்த ஆண்டு இன்று மாலையில் தொடங்கியது. தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காமல் இருப்பது எனக்கு தெரியும். அரசியல் காரணத்திற்காக புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ் நாட்டிற்கு நிதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்றார். தமிழ்நாடு மட்டும் புதிய கல்விகொள்கையை ஏற்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
