Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஸ்டாலின் அப்பா.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் அப்பா.. திமுகவை வச்சு செய்த தவெக!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 15, 2025
in Default
0
ஸ்டாலின் அப்பா.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் அப்பா.. திமுகவை வச்சு செய்த தவெக!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் நடைபெற்றுள்ள இரட்டைக் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் உட்பட இர்ண்டு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் கொலைக்கு காரணம் சாராய விற்பனை அல்ல, முன் விரோதம்தான் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் நிர்வாகத் திறமை பல் இளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

பாதுகாப்பு இல்லாத தமிழ்நாடு என்று மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். கள்ளச் சாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று சொன்னார்கள். அந்த இரும்பு கரம் தற்பொழுது என்ன ஆனது? இரும்பு கரம் காணாமல் போய் விட்டதா? தேடி கண்டுபிடித்து தரட்டுமா? மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அதை செய்வதை விட்டுவிட்டு வெறும் வெற்று விளம்பரம் மட்டும் செய்து வருகிறது.

அமைதி பூங்காவாக இருக்க வேண்டிய தமிழ்நாடு கொலை களமாக மாறி உள்ளது வேதனை தருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? திராவிட மாடல் என்று சொல்வதை விட விளம்பர மாடல் என்று பெயர் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அரசாங்கம் ஷூட்டிங் அரசாங்கமாக உள்ளது.

“அப்பா” வாக இருப்பதில் பெருமையாக உள்ளது என்று சொல்வதில் பெருமை இல்லை. அப்பாவாக நடந்து கொள்வதில்தான் பெருமை உள்ளது. இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை அழிக்கும் மாடலாக உங்கள் திராவிட மாடல் உள்ளது.மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் அரசாக திராவிட மாடல் அரசாங்கள் உள்ளது.

Previous Post

தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை ஏற்காதவரை நிதி கிடையாது..!! – மத்திய அமைச்சர் திட்டவட்டம்…

Next Post

மாநகராட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
மாநகராட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி..

மாநகராட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In