ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் -2 படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை(ஜூலை 12) வெளியாக உள்ளது.
இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, மதுரை எச்.எம்.எஸ். குடியிருப்பைச் சோ்ந்த வா்மக் கலை, தற்காப்புக் கலை, ஆராய்ச்சி அகாதெமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன், மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தாா்.
அவரது மனுவில், “இந்தியன் திரைப்படத்தில் நடிகா் கமல்ஹாசன் பயன்படுத்திய வா்மக் கலை முத்திரை, நான் பயிற்றுவித்தது. அதனால், எனது பெயா் இந்தப் படத்தில் இடம் பெற்றது. தற்போது, இந்தியன் 2 திரைப்படத்திலும் கமல்ஹாசன் அதே முத்திரையைப் பயன்படுத்தியுள்ளாா். ஆனால், என் அனுமதி பெறாமல் இந்த முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, “இந்தியன் திரைப்படத்தில் ‘வா்மக் கலை தகவல்’ என ராஜேந்திரன் பெயா் பதிவு செய்யப்பட்டது. இந்தியன் 2 திரைப்படத்தில் வா்மக் கலை தொடா்பான பதிவுகள், வா்மக் கலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படமாக்கப்பட்டுள்ளது.
