இதுகுறித்து விளக்கம்கேட்க நா.த.க-வின் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர் அபுபக்கரிடம் பேசினோம், “ஆர்.என் ரவி ஆளுநருக்கான உரையை வாசிக்காமல் வெளியேறியது தவறு என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இவ்விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து அண்ணன் சீமான் பேசியிருக்கிறார்.

அதேசமயம் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் யதார்த்த சூழலுக்கு எதிரானவற்றை எழுதிக்கொடுத்ததும் தவறு என்கிறார். ஆனால் இதைவைத்து ஆளுநருக்கு ஆதரவான கருத்து எனக் கட்டமைக்கிறார்கள்.
மேலும் பெரியார் விவகாரத்தில் அண்ணன் சொன்ன குறிப்பிட்ட கருத்துக்கு மீளாய்வு செய்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் உறவு வைத்துக் கொள்வது குறித்து பெரியார் சொன்னதாக வீரமணி பேசியிருக்கிறார். பிறர் மனைவி நோக்குவது தவறல்ல என சேலம் மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த புறநிலை சாட்சிகளை வைத்து அதற்கான தரவுகளை தேடிக் கொண்டிருக்கிறோம். பெரியார் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டால் ஆதாரம் தருகிறோம்” என்றார் மழுப்பலாக.
`ஆதாரம் இருக்கு.. ஆனா இல்ல’ என்ற கதையாக தெரிகிறதே!
