Last Updated:
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 37 பேர் இறந்ததாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்திருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அண்மையில் நடந்த மகா கும்பமேளாவில் 37 பேர் இறந்ததாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்திருந்த நிலையில், 82 பேர் உயிரிழந்ததாக பிபிசி தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மகா கும்பமேளா நடைபெற்ற நிலையில், ஜனவரி 29ஆம் தேதி பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி 37 பேர் இறந்ததாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்திருந்த நிலையில், கள ஆய்வு மேற்கொண்ட பிபிசி ஊடக நிறுவனம், குறைந்தது 82 பேர் உயிரிழந்திருப்பதாகத் தற்போது தெரிவித்துள்ளது.
11 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து இந்தத் தகவல்களைப் பெற்றதாக பிபிசி தெரிவித்துள்ளது. இறந்த 37 பேரின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்ச ரூபாய் அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கியிருந்தது. ஆனால், மேலும் 26 குடும்பங்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கமாக அதிகாரிகள் வழங்கியதாகவும், அவர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பட்டியலில் இல்லை எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.
அதேபோல, கூட்ட நெரிசலில் உயிரிழந்த பலரை நோயால் இறந்ததாகத் தெரிவிக்குமாறு கூறி, அவர்களின் குடும்பத்தினரிடம் கட்டாயப்படுத்திக் கையெழுத்து பெறப்பட்டதாகவும் பிபிசி குற்றம் சாட்டியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதன் மூலம், உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
June 11, 2025 10:52 AM IST

