நகராட்சியினரும் சில நேரங்களில் மட்டுமே குப்பை எடுத்துச் செல்கிறார்கள்; பெரும்பாலும் பல நாட்கள் அங்கேயே குப்பை குவிந்து கிடக்கிறது,
இந்த பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்துவருகிறது. குப்பைத் தொட்டி வைக்காமலும், குப்பைகளை சரியாக எடுக்காததுமே இதற்கு காரணம். பள்ளி அருகிலேயே இவ்வளவு குப்பை குவிந்து கிடப்பதால் மாணவர்கள் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு நாளும் சென்று வருகிறோம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சுத்தம் செய்து இங்கு ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ” அந்த இடத்தை சுத்தம் செய்து குப்பை தொட்டி வைக்கிறோம்” என்றனர்.
