மயிலாடுதுறையில் இளைஞர் கொடூரகொலை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் தலை சிதைந்து பலி, மற்றொரு நபர் படுகாயம், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் நடைபெற்றதா என்று காவல்துறை விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார். கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரமுகர் கண்ணன் படுகொலையில் இவரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை பெருமாள் கோயில் தெற்கு வீதி பகுதியில் அவர் இருசக்கர வாகனத்தில், நண்பர் சரவணன் உடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மேலும் சில வாகனங்களில் வந்த கும்பல் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டியது.
இதில் தலை முழுவதும் சிதைந்து போன நிலையில் அஜித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த சரவணன் தப்பித்து ஓடும்போது அவருக்கும் அரிவாள் வெட்டு ஏற்பட்டதில் படுகாயத்துடன் மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த அஜித் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட போது ஜாதி மோதல் ஏற்படாமல் தடுக்க அஜித் குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வசிக்கும் கலைஞர் காலனி பகுதிக்கு பல மாதங்களாக காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படுகொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படுகொலை காரணமாக மேலும் மோதல்கள் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின் எதிரொலியாக பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம். திறந்திருந்த கடைகளை உடைத்ததால் மயிலாடுதுறை நகர் பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் அடைப்பு. இந்தப் போராட்டத்தால் பேருந்து பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கம். பேருந்து நிலையம் வெறிச்சோடியது:-
இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இன்று மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திறந்திருந்த கடை கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து நிலையம் சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதால் பேரி கார்டுகள் வைத்து அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது இதனால் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்லாமல் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தொடர்ந்து எஸ் பி மீனா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


செத்தவர் ஒன்றும் யோக்கியமானவர் கிடையாது எனவே இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் இவரை கொலை செய்துள்ளனர் இதற்கு மேல் இந்த விவகாரத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை