India oi-Halley Karthik
Updated: Monday, June 26, 2023, 11:25 [IST]
லக்னோ: இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.36 லட்சம் கோடிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்த முதலீட்டு திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்று கவுதம் புத்தர் நகரில் ரூ.200 கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் குழுமத்தின் ரோபோ உற்பத்தி ஆலையை தொடக்கி வைத்த பின்னர் பேசிய யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியுள்ளார். இதில் அவர் மேலும் பேசியதாவது, “பாஜக ஆட்சியின் இரண்டாவது உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் ரூ.36 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வ ஒப்பந்தங்கள் போடப்பட்டன. நல்ல சட்டம் ஒழுங்கு நிலைமை, நல்ல உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், பாதுகாப்பு சூழல் போன்றவற்றின் விளைவாக இந்த முதலீடு வருகின்றன. மாநிலத்தில் இணைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளது. உள்நாட்டு நீர்வழிப் பாதைகளைக் கொண்ட முதல் மாநிலம் உத்தரப் பிரதேசமாகும். நாங்கள் மாநிலத்தில் விமான இணைப்பை மேம்படுத்தியுள்ளோம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017 க்கு முன்பு இரண்டு விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன, அதே மாநிலத்தில் இப்போது ஒன்பது முழுமையாக செயல்படும் விமான நிலையங்கள் உள்ளன. இது தவிர மேலும் 12 புதிய விமான நிலையங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிலையங்கள் திறக்கப்படும். மேலும், சரக்கு ஏற்றுமதிக்கு வழி வகுக்கும் மாநில உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் விரைவில் அமைக்கப்படும். நமது இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக திறமையானவர்களாக மாற்ற நாம் ஒன்றுபட வேண்டும். மாநிலமும், மத்தியமும் இந்த திசையில் உணர்திறனுடன் செயல்படுகின்றன. இளைஞர்களிடம் அவகளுக்கு கிடைக்கும் அனைத்து திட்டங்களைப் பற்றிய தகவல்களும் இருக்க வேண்டும். Adverb நிறுவனங்களுடன் கைகோர்க்க வேண்டும், ஏனெனில் அது நல்ல திறமையைப் பெற முடியும் மற்றும் அவர்களின் தொழிற்சாலைக்கு வரும் இளைஞர்கள் CM இன்டர்ன்ஷிப் அல்லது PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர முடியும், இதில் பாதி ஊதியம் அரசால் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
The Global Investors Conference was held in Uttar Pradesh earlier this year. In this, MoUs were signed for Rs.36 lakh crore. In this case, Yogi Adityanath has said that the Uttar Pradesh government has approved these investment projects.

