Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்.. இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2025
in அரசியல் செய்திகள்
0
நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்.. இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 13, 2025 10:54 AM IST

அமகதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து ஓட்டுமொத்த உலகையே உலுக்கிய நிலையில், இந்தியா எதிர்கொண்ட மிகத் துயரமான விமான விபத்துகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமான விபத்து (கோப்பு படம்)விமான விபத்து (கோப்பு படம்)
விமான விபத்து (கோப்பு படம்)

இந்தியாவின் மிக மோசமான விமான விபத்தான 1996ல் அரியானாவில் நடந்த சர்க்கி தாத்ரி விமான விபத்தில் 349 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.நடுவானில் 14 ஆயிரம் அடி உயரத்தில் கஜகஸ்தான் நாட்டின் Ilyushin Il-76 விமானமும், சவுதி அரேபியாவின் Boeing 747 விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இரு விமானங்களுக்கும் டெல்லி விமானக் கட்டுபாட்டு நிலையத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கஜகஸ்தான் விமானத்தின் விமானிகளுக்கு ஆங்கில மொழிப் புரிதலில் இருந்த குறைபாடே விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்தது. 1978ல் மும்பையில் இருந்து 213 பேருடன் பயணித்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அரேபிக் கடலில் விழுந்ததில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல், 2010ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி துபாயில் இருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 166 பயணிகளில் 158 பேர் உயிரிழந்தனர்.

1988ல் தற்போதைய ஏர் இந்தியா நிறுவனத்தின், அப்போதைய இந்தியன் ஏர்லைன்ஸ் Boeing 737 விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதில் 133 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட வெளிச்சமின்மை காரணமாக ஓடுபாதை அருகே இருந்த மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

1990ல் மீண்டும் ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில், 92 பயணிகள் உயிரிழந்தனர். பெங்களூருவில் 146 பயணிகளுடன் தரையிறங்க இருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் Airbus A320 விமானம் கட்டுப்பாட்டு அறையிடம் இருந்து உத்தரவுகள் உரிய நேரத்தில் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் கோல்ப் மைதானத்தில் விழுந்து நொறுங்கியது.

2020ல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் அருகே திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக 110 அடி உயரத்தில் இருந்து விழுந்து பல துண்டுகளாக நொறுங்கியது. 190 பயணிகள் சென்ற இந்த விமானத்தில் விமானிகள் உள்பட 21 பேர் உயிரிழந்த நிலையில், 75 பேர் அதிர்ஷ்டவசமாக தீவிர காயங்களுடன் உயிர் தப்பினர்.

விமான போக்குவரத்துத் துறையில் இந்தியா உலத்தரம் வாய்ந்த நாடாக காணப்படும் நிலையிலும், இது போன்ற விமான விபத்துகள் தொடர் கதையாகி வருவது வேதனை அளிப்பதாகவே உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 13, 2025 10:53 AM IST



.

Previous Post

சாபங்கள் நீங்கிய ஆண்டு: விளையாட்டு உலகின் பொற்காலமான 2025!

Next Post

நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி

நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In