Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நீதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி நடத்தப்பட்ட விதம் ஏற்புடையதல்ல: காங்கிரஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நீதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி நடத்தப்பட்ட விதம் ஏற்புடையதல்ல: காங்கிரஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதி அயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதி ஆயோக் கூட்டத்தில், அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது மிக மோசமானது என்று, எதிர்க்கட்சி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது.

புது தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.

மைக் அணைக்கப்பட்டது.. நீதி ஆயோக் கூட்டத்திலிருந்து மம்தா வெளிநடப்பு

வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு வங்க மாநிலத்துக்குத் தேவையான நிதி குறித்து பேசிக்கொண்டிருக்கும்போதே, எனது மைக் துண்டிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், அவர் கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மத்திய அரசு கூறுகையில், மம்தா பானர்ஜி கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், நீதி ஆயோக் கூட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்றும் கூறியிருடிககிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நீதி ஆயோக் திட்டத்தின் கூட்டத்தை பிரதமர் மோடி ஒரு டிரம்ஸ் வாசிப்பவர் போல நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் காங்கிரஸ் விமரிசித்துள்ளது.

இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்திருந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மட்டுமே பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Sundar Pichai: ‘கூகுள் சி.இ.ஓ பத்தாது.. நீ டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம்’ பெற்றோரின் மனதைச் சொன்ன சுந்தர் பிச்சை-parents believed that i would get a doctorate says sundar pichais record of his parents mindset

Next Post

Abdul kalam: அப்துல் கலாமின் 9-ம் ஆண்டு நினைவு தினம்; ராமேஸ்வரத்தில் மக்கள் அஞ்சலி – போட்டோ ஆல்பம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Abdul kalam:  அப்துல் கலாமின் 9-ம் ஆண்டு நினைவு தினம்; ராமேஸ்வரத்தில் மக்கள் அஞ்சலி – போட்டோ  ஆல்பம்

Abdul kalam: அப்துல் கலாமின் 9-ம் ஆண்டு நினைவு தினம்; ராமேஸ்வரத்தில் மக்கள் அஞ்சலி - போட்டோ ஆல்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In