மேட்டூர்: மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரித்தது; அணையில் இருந்து அப்படியே 1.70 லட்சம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூா் அணைக்கு தொடா் நீா்வரத்து அதிகரித்ததால் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை எட்டியது. இதன்மூலம் அணை வரலாற்றில் 43 ஆவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீா் முழுமையாக 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு புதன்கிழமை ஒரு லட்சத்து 25,000 கனஅடி உபரிநீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
