Last Updated:
வீடியோக்கள் உருவாக்குவதில் இளைஞர்களும் முதியோர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்தப் பகுதியில் டிஜிட்டல் கன்டென்ட் மையமாக இந்த கிராமம் மாறி உள்ளது.
வட மாநிலத்தில் உள்ள மிகச்சிறிய கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூடியூபர்கள் உள்ளனர். இங்கு 40க்கும் அதிகமான youtube சேனல்கள் லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்களை பெற்றுள்ளது. அந்த கிராமம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
youtube சேனல்கள் கடந்த சில ஆண்டுகளாக பலரது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. திறமை மிக்க கலைஞர்கள், கண்டன்ட் கிரியேட்டர்கள் youtube தளங்களை சரியாக பயன்படுத்தி வருமானத்தையும் புகழையும் பெறுகிறார்கள். இவர்களுக்கு பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பு காணப்படுகிறது.
இப்படி தொட்டதெல்லாம் பலனாக அமையும் யூட்யூபை நாளுக்கு நாள் பயன்படுத்துவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களிலும் youtube-ல் வீடியோக்கள் போடுவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள துல்சி என்ற கிராமம் ஏராளமான யூடியூபர்களை கொண்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் youtube-ல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த கிராமத்தில் மட்டும் 40 youtube சேனல்கள் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றன. அவற்றில் லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
குறிப்பாக “Being Chattisghariya” என்ற youtube சேனல் 250க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்த வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சேனலுக்கு 1,20,000-க்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். இந்த கிராமத்தில் மொத்தமே சுமார் 4000 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
வீடியோக்கள் உருவாக்குவதில் இளைஞர்களும் முதியோர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்தப் பகுதியில் டிஜிட்டல் கன்டென்ட் மையமாக இந்த துல்சி கிராமம் மாறி உள்ளது.
அரசியல், குடும்பம் சார்ந்த வீடியோக்கள், நகைச்சுவை, உள்ளூர் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
March 02, 2025 11:09 AM IST

