Last Updated:
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் எரிபொருள் தேவைக்காக ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறினார்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகன விலைக்கு நிகராக மின்சார வாகனங்களின் விலை குறையும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் எரிபொருள் தேவைக்காக ஆண்டுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறினார். இது பொருளாதார சுமையாக இருப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே பசுமை எரிசக்திக்கு மாறுவது நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்று கூறிய அவர், அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் விலைக்கு ஈடாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலப்பதால் விவசாயிகளுக்கு கூடுதலாக 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் கட்கரி மகிழ்ச்சி தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் வாகன உற்பத்தித்துறையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த நிதின் கட்கரி, 2027 ஆம் ஆண்டுக்குள் சாலை அமைப்பதற்காக பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
October 07, 2025 5:06 PM IST

