Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் நைட்டி,லுங்கி அணிந்து வெளியேற தடை! நொய்டாவில் நடந்த ட்விஸ்ட்! என்னாச்சு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2023
in அரசியல் செய்திகள்
0
அடுக்குமாடி குடியிருப்பில் நைட்டி,லுங்கி அணிந்து வெளியேற தடை! நொய்டாவில் நடந்த ட்விஸ்ட்! என்னாச்சு?
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Nantha Kumar R
Published: Thursday, June 15, 2023, 10:55 [IST]
நொய்டா: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது லுங்கி, நைட்டி உள்ளிட்ட ஆடைகளை அணியக்கூடாது என அறிவுறுத்திய நிலையில் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் நொய்டா அமைந்துள்ளது. இது டெல்லிக்கு மிகவும் அருகே உள்ள பகுதியாகும். நொய்டா என்பது முக்கிய நகராக உள்ளது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியேறி வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் புதிது புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் அங்கு ஹிம்சாகர் எனும் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எப்போதும் குடியிருப்பு வளாகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளுக்கு தாங்கள் விரும்பிய உடைகளை அணிந்து சென்று வந்தனர். இதற்கிடையே தான் கடந்த 10ம் தேதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசில் ‛‛குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தாங்கள் அணியும் உடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் லுங்கிகள் மற்றும் நைட்டிகள் அணிந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். எப்போதும் உங்களின் நடத்தை, உடையில் சிறப்பு கவனம் தேவை. ஆட்சேபிக்கம் வகையில் யாரும் நடக்க கூடாதது. இதனால் வீட்டுக்குள் பயன்படுத்த வேண்டிய லுங்கி, நைட்டி உள்ளிட்டவற்றை வெளியே அணிந்து வர வேண்டாம்” என கூறப்பட்டு இருந்தது. இந்த நோட்டீஸ் என்பது விவாதத்தை கிளப்பியது. மேலும் இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் கூட இந்த முடிவின் பின்னணி பற்றி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கல்ரா விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛இது ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால் பெண்கள் நைட்டி அணிந்து திரிந்தால், அது ஆண்களுக்கு சங்கடமாக இருக்கும். ஆண்கள் லுங்கி அணிந்தால் பெண்களுக்கும் அசவுகரியமாக இருக்கும். இதனால் ஒருவரையொருவர் மதித்து இந்த ஆடைக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். இதுபற்றிய புகாரால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இருப்பினும் கூட குடியிருப்பில் வசிப்போர் இந்த நோட்டீசுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து இந்த முடிவானது 4 நாட்களுக்கு பிறகு நேற்று திரும்ப பெறப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Residents of private apartments in Uttar Pradesh’s Noida have been advised not to wear lungis and nighties while stepping out of their homes.
Story first published: Thursday, June 15, 2023, 10:55 [IST]

.

Previous Post

தெரு நாய்களின் பிடியில் அனகாபுத்தூர்: அச்சத்துடன் நடமாடும் மக்கள்

Next Post

திருப்பூரில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் – பின்புலம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பூரில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் - பின்புலம் என்ன?

திருப்பூரில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் - பின்புலம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In