Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ஹைதராபாத் தீ விபத்து… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த சோகத் தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 19, 2025
in அரசியல் செய்திகள்
0
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ஹைதராபாத் தீ விபத்து… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த சோகத் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 18, 2025 6:19 PM IST

ஹைதராபாத் சார்மினாரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலியானவர்கள் யாருக்குமே தீக்காயம் ஏற்படவில்லை என்பது சோகமான தகவல்.

News18News18
News18

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று அதிகாலை 6.30 மணிக்குப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிறு அதிகாலை பொழுதில் நிம்மதியான உறக்கத்தில் இருந்த சமயத்தில் பற்றிய தீ அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வாழ்நாள் துயரத்தைக் கொடுத்தது.

கட்டடத்தின் மையப்பகுதியில் பரவிய தீ நான்கு புறமும் சுற்றி வளைத்து எரிய ஆரம்பித்தது. அப்போது குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பலரும் உறங்கிக் கொண்டிருந்தனர். வேகமாக பரவிய தீயானது வீடுகளில் உள்ள துணிகளிலும், மின்சார ஒயர்களிலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் தீயில் வசமாக சிக்கிக் கொண்டனர். கட்டடத்தில் தீ பிடித்தது தெரியவரப் பெண்கள் குழந்தைகள் எனப் பலரும் கத்தி கூச்சலிட்டுக் கதறி அழுதுள்ளனர். ஆனால் யாராலும் அங்கிருந்து வெளியேற முடியாமல் நிலைமை மோசமானது.

தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயின் தாக்கத்தால் பலர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி மொத்தம் 17 பேர் வரை பலியாகியுள்ளனர். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எட்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் அருகே அரங்கேறிய இத்தீவிபத்து நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கட்டடத்தில் தீ பிடித்தது எப்படி? மின்கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்குமா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

தெலுங்கானாவின் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் இயக்குநர் ஜெனரல், ஒய் நாகி ரெட்டி இது குறித்து பேசும்போது, “முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்த 17 பேரும் தீயால் ஏற்பட்ட கடும் புகையால் சுவாசிக்க முடியாமல் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது. யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“கட்டிடத்திற்கு சுரங்கப்பாதை போன்ற இரண்டு மீட்டர் நுழைவாயில் மட்டுமே இருந்தது. முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்குச் செல்ல ஒரு மீட்டர் அளவிலான படிக்கட்டு மட்டுமே உள்ளது. இதனால் தப்பித்தல் மற்றும் மீட்புப் பணிகள் மிகவும் கடினமாகின. காலை 9 மணியளவில், தீ கட்டுக்குள் வந்தது. கட்டிடத்திற்குள் மொத்தம் 21 பேர் இருந்தனர். புகையை உள்ளிழுத்ததால் இறப்பு ஏற்பட்டது; யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை” என தீயணைப்புத் துறை அதிகாரியும் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சம் நிவாரண நிதியையும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, சிக்கியுள்ளவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காயமடைந்தவர்களை சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ஹைதராபாத் தீ விபத்து… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த சோகத் தகவல்



.

Previous Post

Vikatan Plus – 25 May 2025 – அட்டைப்படம் விகடன் ப்ளஸ்

Next Post

புதுக்கோட்டை: ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோ | DMK

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுக்கோட்டை: ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோ | DMK

புதுக்கோட்டை: ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோ | DMK

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In