Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பத்தூர்: `உள்ள நுழைய கூட முடியாது’ – வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலையில் கழிவறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2024
in அரசியல் செய்திகள்
0
திருப்பத்தூர்: `உள்ள நுழைய கூட முடியாது’ – வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலையில் கழிவறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது.

தற்போது இது எவ்வித பராமரிப்பின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. இந்த அலுவலகத்துக்குத் தினமும் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருமானச் சான்றிதழ், நில அளவீடு, அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சான்றிதழ் போன்ற பல தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

திருப்பத்தூர்

அரசு அலுவலகம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதுடன், அவர்களின் தேவைகள் நிறைவேறும் வரை சில இங்கேயே மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படி காத்திருக்கும் பொதுமக்கள் அவசர நேரத்தில் கூட கழிவறை செல்ல முடியாத அவல நிலை இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உருவாகியுள்ளது. குறிப்பாகப் பெண்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்

மேலும், அலுவலகத்துக்கு வரும் சிலர் அப்பகுதிக்கு அருகிலிருக்கும் மறைவான இடத்தில் சிறுநீர் கழித்து விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியும் தூற்நாற்றம் வீசி காணப்படுகிறது.

திருப்பத்தூர்: பராமரிப்பின்றி பாழாகும் பூங்கா; கூடாரமாக்கி கொண்ட சமூக விரோதிகள்- கண்டுகொள்ளுமா அரசு?

இது குறித்து அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் கேட்டபோது, “இந்தக் கழிவறையில் ஒரு நொடிகூட நிற்க முடியாது. உள்ளே கூட செல்ல முடியாது. மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளது. அந்தப் பக்கம் சென்றாலே மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. நாங்கள் எப்படி அவசரத்துக்கு செல்ல முடியும். மற்ற‌ இடங்களில் இதுபோன்று இருந்ததால் அரசு அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுத்தோ அல்ல அந்த விவகாரம் குறித்துப் புகாரளித்தோ தீர்வு காணலாம்.

திருப்பத்தூர்

ஆனால், அரசு அலுவலகத்திலேயே இப்படி இருந்தால் எங்கு சென்று புகார் செய்வது. இவ்வளவு பணியாளர்கள் வேலைபார்க்கும் இந்த அலுவலகத்தில் ஒருவர் கூட இதைக் கண்டுகொள்வதில்லை. இவர்கள் முறையாகக் கழிப்பறையைப் பராமரித்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. இந்த நிலை இப்படியே நீடித்தால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகும்.” என்றனர்.

திருப்பத்தூர்

மேலும், அங்குத் தினமும் படிவம் நிரப்பி தருபவர்கள் இதைப் பற்றிக் கூறுகையில், “மூன்று மாதங்களுக்கு முன்புதான் தற்போதைய திருப்பத்தூர் ஆட்சியர் தர்பகராஜ் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் சென்றார். அப்போது, உடனே கழிவறையைச் சுத்தம் செய்தார்கள். ஆனால், தற்போது மீண்டும் பழைய சூழல் நிலவிக் காணப்படுகிறது. இதுகுறித்து அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேசியபோது, நடவடிக்கை எடுக்கப்படும் வெறும் வார்த்தையாக முடித்துவிட்டனர்.” என்றனர். எனவே, அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுப்பார்களா இல்லையா என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்!?

குப்பைக் கிடங்காக மாறும் திருப்பத்தூர் ஏரி; நோய் பரவும் அபாயம்… நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal



.

Previous Post

ஏஞ்சல் ஒன்னின் ஓஷோ கிருஷ்ணன் அடுத்த வாரம் இந்தப் பங்குகளை வாங்க பரிந்துரை.. முழு விவரம் உள்ளே

Next Post

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 15 அன்று தாமதமாக புறப்படும் ரயில்கள் – தெற்கு ரயில்வே சமீபத்திய அட்டவணை! | Southern railway latest announcement – train services are rescheduled due to late running of pairing rake

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 15 அன்று தாமதமாக புறப்படும் ரயில்கள் – தெற்கு ரயில்வே சமீபத்திய அட்டவணை! | Southern railway latest announcement – train services are rescheduled due to late running of pairing rake

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 15 அன்று தாமதமாக புறப்படும் ரயில்கள் - தெற்கு ரயில்வே சமீபத்திய அட்டவணை! | Southern railway latest announcement - train services are rescheduled due to late running of pairing rake

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In