திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவின் பதிலடி
திமுக வழக்கறிஞர் சரவணன், “பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவிவிடுவதாக” குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த சூர்யா, “பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நடந்திருந்தால், ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால், திமுகவோ அல்லது காங்கிரஸோ எந்த மாநிலத்திலும் குறிப்பிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை,” என்றார். மேலும், “டாஸ்மாக் வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ராஜு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். இது பாஜகவின் கூற்றல்ல, விசாரணை அமைப்பின் கூற்று,” என அவர் விளக்கினார்.
