Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 15, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நமது நிருபர்

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப்பட்ட குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. மேலும், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள், மணியம் (பணியாளர்) உள்ளிட்டோரை அதற்குரிய பாரம்பரிய நடைமுறைகளின்படி நியமிக்கவும் உத்தரவிட்டது.

ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களை அர்ச்சர்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக அகில இந்திய ஆதி சைவ சிவாசாரியர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதில் ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களில் தொன்றுதொட்டுப் பணி செய்துவரும் சிவாசாரியர்கள், பட்டர்கள், குருக்கள், ஆதி சைவர்கள் ஆகியோரின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அரசின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவும் தமிழக அறநிலையத் துறையின் அரசாணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியது. வேறு சில அமைப்புகளும் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கை 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை “அதேநிலை தொடர வேண்டும்’ என உத்தரவிட்டது. இதற்கிடையே ஆகம முறைப்படி நடத்தப்படும் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள், மணியம் மற்றும் சிப்பந்திகளை நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் யானை எஸ்.ராஜேந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். முந்தைய நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜேஷ் பின்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்குரைஞர் யானை எஸ். ராஜேந்திரன் ஆஜராகி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 12 குருக்களும், 3 மணியமும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 2 குருக்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பூஜை, புனஸ்காரத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குருக்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார். ரிட் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் குருகிருஷ்ண குமார், பி.வள்ளியப்பன் ஆகியோர் ஆஜராகி, “ஆகம கோயில்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க ஆட்சேபம் இல்லை’ என்றனர்.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, அதன் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர், “பயிற்சி அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதைக் கூட மனுதாரர்கள் எதிர்க்கின்றனர். ஆகம கோயில்களும் மிகவும் முக்கியமானவைதான். அதற்காக கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதனால், ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க அனுமதிக்கலாம்’ என்றனர்.



.

Previous Post

வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்காற்றியது, ஆனால் திமுக…”- தவெக தலைவர் விஜய் அறிக்கை

Next Post

சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவித்தது குறித்து பிரதமர் பதிலளிக்காதது ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவித்தது குறித்து பிரதமர் பதிலளிக்காதது ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி

சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவித்தது குறித்து பிரதமர் பதிலளிக்காதது ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In