Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘குற்றம் 23’ திரைப்படத்தையே விஞ்சும் சம்பவம்.. டிஎன்ஏ டெஸ்ட் மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2025
in அரசியல் செய்திகள்
0
‘குற்றம் 23’ திரைப்படத்தையே விஞ்சும் சம்பவம்.. டிஎன்ஏ டெஸ்ட் மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ திரைப்படத்தையே விஞ்சும் அளவிற்கு, ஐதராபாத்தில் திகிலூட்டும் ஒரு கிரைம் சம்பவம் அரங்கேறியுள்ளது. செயற்கை கருத்தரிப்பு செய்து கொள்வதற்காக வந்த ராஜஸ்தான் தம்பதியிடம், டாக்டர் நர்மதா கேங் சித்து வேலையை காட்டியுள்ளது. டிஎன்ஏ டெஸ்ட் மூலம் அம்பமான அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் டாக்டர் நர்மதா என்பவர், ஷ்ருஷ்டி ஃபெர்டிலிட்டி சென்டர் என்ற பெயரில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அண்மையில், ராஜஸ்தானை சேர்ந்த தம்பதி, திருமணமாகி ஆண்டுகள் பல கடந்தபோதும் குழந்தை பாக்கியம் இல்லை எனக் கூறி, இந்த கருத்தரிப்பு மையத்துக்கு வந்தனர். அப்போது, செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவர் நர்மதாவை அணுகியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் கருத்தரிப்பு மையத்தின் செயல்பாடுகள் மீது அந்த தம்பதிக்கு திடீரென சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், தங்களுக்கு பிறந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த டாக்டர் நர்மதாவிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், குழந்தைக்கு மரபணு சோதனை நடத்தாமல் மருத்துவர் தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து சொந்த ஊர் சென்ற தம்பதி, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு மரபணு சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதில், குழந்தையின் மரபணு வேறு ஒருவருடையது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே செகந்திராபாத்திற்கு வந்த தம்பதி அங்குள்ள கோபாலபுரம் காவல் நிலையத்தில் டாக்டர் நர்மதாவுக்கு எதிராக புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷ்ருஷ்டி கருத்தரிப்பு மையத்தில் அதிகாலை இரண்டு மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பெண்ணின் கருமுட்டை, ஆணின் உயிரணுவை உறைந்த நிலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்ததில் கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் பெண் மருத்துவர் பெரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மையத்தில் இருந்து கருமுட்டை, ஆணின் உயிரணுவை சேகரித்து நாடு முழுவதும் விற்று கோடிகளில் புரண்டது அம்பலமானது.

டெஸ்ட் டியூப் பேபிக்காக வத்த தம்பதியிடம், கணவனின் உயிரணுவுக்குப் பதில் வேறு ஒருவரின் உயிரணுவை செலுத்தி மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஐதராபாத்தைச் சேர்ந்த தம்பதியிடம் 35 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு குழந்தை ஒன்றை, மருத்துவர் நர்மதா விற்பனை செய்த அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியானது. இதற்காக, குழந்தைகளை விற்பனை செய்ய பல புரோக்கர்கள் நர்மதாவின் கீழ் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

டாக்டர் நர்மதா முறையான அனுமதியின்றி செயல்படும் இந்தியன் ஸ்பேர்ம் டெக் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுள்ளார். இவர், ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா உட்பட பல்வேறு நகரங்களிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நடத்தி, மெகா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவர் நர்மதா, அவருடைய மேலாளர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல யூடியூபர்.. ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த போலீசார்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

இதைத்தொடர்ந்து கைது செய்வதற்காக அவருடைய வீட்டிற்கு போலீசார் சென்றனர். அதை முன்கூட்டியே அறிந்த டாக்டர் நர்மதா தலைமறைவாகியுள்ளார். செயற்கை கருத்தரிப்பு முறையில் மோசடி நடைபெற்ற சம்பவம் காட்டுத்தீயாக பரவியதால், ஷ்ருஷ்டி மையத்தில் சிகிச்சைபெற்றவர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். இந்த நிலையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அளிக்கப்படும் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தெலங்கானா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும், முன்னதாகவே சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் கருமுட்டை மற்றும் ஆணின் உயிரணுவை விற்பனை செய்து, மெகா மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Hyderabad,Telangana

First Published :

July 28, 2025 5:59 PM IST



.

Previous Post

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

Next Post

இன்று 17 புறநகா் ரயில்கள் ரத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று 17 புறநகா் ரயில்கள் ரத்து

இன்று 17 புறநகா் ரயில்கள் ரத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In