Last Updated:
பெங்களூருவில் தேவனஹள்ளி பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டியில் 20 இளம்பெண்கள் உட்பட 31 பேர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் பண்ணை வீட்டில் தடையை மீறி ரேவ் பார்ட்டியில் குத்தாட்டம் போட்டு எல்லைமீறிய 20 இளம்பெண்கள் உட்பட 31 பேரை, போலீசார் கைது செய்தனர். விடிய, விடிய பண்ணை வீட்டில் நடந்தது என்ன? என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், கன்னமங்களா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டி நடத்தி கொடச்சல் கொடுப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு போன் செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி சட்ட விரோதமாக , காதை கிழிக்கும் சத்ததுடனும் டிஜே மியூசிக் போட்டு உறக்கத்தை கெடுப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். அது தொடர்பாக பார்ட்டி மேலாளரை பலமுறை கண்டித்தும் அதை கண்டுகொள்ளாமல் இளம்வயதினரை போதை வலையில் வீழ்த்தி கல்லாக்கட்டுவதாக குற்றம் சாட்டி இருந்தனர்.
மேலும் பார்ட்டியில் பங்கேற்கும் ஐடி ஊழியர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை சப்ளை செய்து சுயநினைவை இழக்க வைத்து பார்ட்டி எனும் பெயரில் வரம்பு மீறுவதாகவும் புகார் அளித்துள்ளனர். உடனே அது தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் பண்ணை வீட்டை போலீஸ் படையும் சுற்றி வளைத்தனர். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடி எல்லைமீறலில் ஈடுபட்ட இளம்பெண்கள் மற்றும் ஆண்களை சுற்றி வளைத்து அதிரடி காட்டினர்.
போலீசாரை கண்டதும் அதில் பலர் தப்பியோட முயன்றனர். ஆனால் பண்ணை வீட்டை நான்கு புறமும் சுற்றி வளைத்திருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. இதனையடுத்து ரேவ் பார்ட்டியில் பங்கேற்று போதை ஏற்றி மயக்கத்தில் இருந்த 20 இளம்பெண்கள் உட்பட 31 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். மேலும் பண்ணை வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த கும்பலை கூண்டோடு பிடித்தனர். அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று திவீர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தனிப்படையினர் பண்ணை வீட்டில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட விலையுயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அதை பெங்களூருவிற்கு சப்ளை செய்தது யார்? என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். ரேவ் பார்ட்டி என்ற பெயரில் விடிய விடிய ஆட்டம் போட்டு போதையில் எல்லைமீறிய 20 பெண்கள் உட்பட 31 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bangalore,Karnataka
‘ரேவ் பார்ட்டி’யில் எல்லைமீறிய 20 இளம்பெண்கள்… விடிய, விடிய பண்ணை வீட்டில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

